வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கு புதிய உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்!

உயர்நீதிமன்றம் விலங்குகளை நேசிப்பவர்களுக்கென்றே ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 29, 2021, 02:42 PM IST
வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கு புதிய உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்! title=

உயர்நீதிமன்றம் விலங்குகளை நேசிப்பவர்களுக்கென்றே ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.  அதன்படி, 

1) நாய்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு காவல்துறையினர் நாய்களை துன்புறுத்துபவர்கள், நஞ்சு கலந்த உணவுகளை கொடுப்பவர்கள் அல்லது அவற்றை வேறு இடத்திற்கு கடத்துபவர்களா ஆகியோர் மீது எவ்வித பாரபட்சமுமின்றி நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

2)  SECTION 503 : இந்திய பீனல் கோட் 1860 படி, விலங்குகளை பயமுறுத்ததால் ஒரு கிரிமினல் குற்றமாகும்.  அதன்படி ஏவரேனும் நாய்களை துன்புறுத்தினாலோ, மிரட்டினாலோ இந்திய பீனல் கோட் சட்டம் குற்றவியல் பிரிவு 503 அடிப்படையில் பிடிவாரண்ட் இல்லாமலேயே அவர்களை கைது செய்யலாம்.

3) SECTION 506 : இந்த சட்டத்தின் படி, விலங்குகளை துன்புறுத்தல், அவற்றிடம் முறைகேடாக நடந்து கொள்ளுதல், நஞ்சு உணவை அளித்தல் போன்றவை குற்றமாகும்.

dog

4)  I.P.C. பிரிவு 428 மற்றும் 429 படி, செல்ல பிராணிகள் அல்லது மற்ற விலங்குகளை துன்புறுத்தினாலோ, வேறு இடத்திற்கு கடத்தினாலோ அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக 5 ஆண்டுகள் சிறை தண்டனைகள் வழங்கப்படும்.

5) டெல்லி போலீஸ் சட்டம் 1968, பிரிவு 73 to 79, 99 படி விலங்குகளால் தீங்கு ஏற்படும்போது நடவடிக்கை எடுக்கப்பட சிறப்பு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

6) பிரிவு 11 மிருகவதை தடுப்பு சட்டம் மூலம் விலங்குகளுக்கு தீங்கு விளைவிப்பவர் எவராயினும் அவர்களுக்கு அபராதமும், தண்டனையும் வழங்கப்படும்.

7) விலங்குகளுக்கான கருத்தடை சட்டத்தின் மூலம் ரேபிஸ் நோயை ஒலிக்கும் பொருட்டு தெரு நாய்களுக்கு ஊசிகள் மூலம் அவர்களுக்கு கருத்தடை மட்டுமே செய்யப்பட அதிகாரம் உள்ளது, அவற்றை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அப்புறப்படுத்த எவ்வித உரிமையும் வழங்கப்படவில்லை.  உதாரணமாக தெரு நாய்களை கொள்ள முயற்சிப்பது, அவற்றை வேறு இடத்திற்கு விரட்டியடிப்பது போன்றவற்றிற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

8) தெருநாய் பாதுகாப்பு மேலாண்மை விதி 2001 படி, தெரு நாய்களை தொல்லையாக கருதி அவற்றை நீக்குதல் அல்லது கடத்துதல் கூடாது.  அவைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு மீண்டும் அதே இடத்திலேயே விடப்படும், இந்த தெரு நாய்களை அகற்ற அந்த முனிசிபாலிட்டிக்கு கூட உரிமை இல்லை.

9) பொதுமக்கள் குறைதீர்ப்பு ஆணையம் அறிக்கைபடி விலங்குகள் நல வாரியம் விலங்குகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுகளை வழங்க வேண்டும்.  

10) உச்ச நீதிமன்றமும் நாய்களை இடம்பெயற செய்தல், கடத்துதல் போன்ற செயல்களை எதிர்த்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

Article 51-A படி நம் நாட்டின் இயற்கை வளங்களான காடுகள், ஆறுகள், விலங்குகள் போன்றவற்றை பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.

Article 19 படி ஒருவருக்கு எத்தகைய தொழிலை தொழிலை செய்யவும் சுதந்திரம் உள்ளது.  அதேபோல ஒருவருக்கு விலங்குகளை பாதுகாப்பது தான் வேலையாக இருந்தால், அதனை செய்ய அவருக்கு முழு சுதந்திரம் உண்டு.

Article 21 படி யாரேனும் விலங்குகளுக்கு உணவளிக்க விரும்பினாலும், அவற்றிற்கு தங்க இடம் கொடுக்க விரும்பினாலும் அவற்றை செய்ய அவர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது.

ALSO READ கிட்னியைக் கொடு என மனைவியை டார்ச்சர் செய்த கணவன்! சிறை கம்பிக்குள் முடக்கம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News