கியூட் பூனை செய்யும் பானை: பார்த்து பார்த்து உருகும் நெட்டிசன்கள், வைரல் வீடியோ

Funny Animal Video: கியூட்டான ஒரு குட்டி பூனையின் வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது. இதில் பூனை பானை செய்யும் விதம் பார்க்க மிக அழகாக இருக்கிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 23, 2022, 01:07 PM IST
  • பூனைகள் பல விஷயங்களில் ஆர்வம் காட்டும் அரிய சிறிய உயிரினங்கள்.
  • அவற்றின் உள்ளுணர்வில் எப்போதும் ஆர்வத்தின் அம்சம் தெரியும்.
  • பூனைகளுக்கு ஒரு விஷயத்தின் மீது ஆர்வம் வந்துவிட்டால், அதை ஆராயாமல் அவை விடாது.
கியூட் பூனை செய்யும் பானை: பார்த்து பார்த்து உருகும் நெட்டிசன்கள், வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணையத்தில் வைரலாகும் பல வீடியோக்களில் காட்டப்படும் சில விஷயங்கள் நம்மை சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சோகத்தை மறந்து சிரிக்க வைக்கும் பல வீடியோக்கள் அவ்வப்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகின்றன. தற்போதும் அது போன்ற, வேடிக்கையான, சுவாரசியமான வீடியோ ஒன்று இணையத்தை கலக்கி வருகின்றது.

பூனைகள் பல விஷயங்களில் ஆர்வம் காட்டும் அரிய சிறிய உயிரினங்கள். அவற்றின் உள்ளுணர்வில் எப்போதும் ஆர்வத்தின் அம்சம் தெரியும். பூனைகளைப் பொறுத்தவரை, உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. பூனைகளுக்கு ஒரு விஷயத்தின் மீது ஆர்வம் வந்துவிட்டால், அதை ஆராயாமல் அவை விடாது. 

ஆர்வம் கொண்ட அப்படிப்பட்ட ஒரு குட்டி பூனையின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. பூனை ஒன்று பானை செய்ய கற்றுக் கொள்ளும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு நபர், பானை செய்யும் சக்கரத்தில் ஒரு மண் பானையை உருவாக்குவதை வீடியோவில் முதலில் காண முடிகின்றது. அவருக்கு அருகில் அமர்ந்திருக்கும் பூனை அந்த நபர் பானை செய்யும் விதத்தை ஆர்வமாக பார்க்கிறது. சிறிது நேரம் அதை அப்படியே பூனை பார்த்துக்கொண்டிருக்கிறது. பூனையால் தனது ஆர்வத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அது ஆர்வத்துடன் சக்கரத்தில் உள்ள களிமண் மாதிரியைத் தொடத் தொடங்குகிறது. சுழலும் சக்கரம் மிகவும் அழகான ஒரு பனையை எவ்வாறு உருவாக்குகிறது என்பதை புரிந்துகொள்ளவும் பூனை முயற்சி செய்கிறது. 

மேலும் படிக்க | சிரிக்காம இருக்க முடியாது: கொம்புடன் வந்த பாட்டி, குத்தாட்டம் போட்ட தாத்தா, வைரல் வீடியோ 

பார்ப்பதற்கு மிகவும் கியூட்டாக இருக்கும் இந்த வீடியோவை, ட்விட்டரில், Buitengebieden என்ற பயனர் பகிர்ந்துள்ளார். இதற்கு "Powtery" என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

பானை செய்ய முயற்சி செய்யும் பூனை: கியூட் வீடியோவை இங்கே காணலாம்

இந்த வீடியோ இதுவரை 2.9 மில்லியன் வியூஸ்களைக் குவித்துள்ளது. மேலும் 14,000 க்கும் மேற்பட்ட ரீட்வீட்கள் மற்றும் கோட் ட்வீட்களை பெற்றுள்ளது. நெட்டிசன்கள் இந்த வீடியோவை மிகவும் விரும்பி பார்த்து வருகிறார்கள். இதற்கு பல வித கமெண்டுகளையும் அளித்து வருகிறார்கள். 

‘இந்த பூனையை பார்க்க பார்க்க் ஆசையாக உள்ளது’ என ஒருவர் எழுதியுள்ளார். ‘மனதில் முடிவு செய்துவிட்டால் நம்மால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு உதாரணம்’ என மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார்.

‘மட்பாண்டம் செய்வதில் மனிதர்களுக்கு கூட இத்தனை அழகான ஆர்வம் இருக்குமா என தெரியவில்லை’ என ஒரு பயனர் தன் கருத்தை தெரிவித்துள்ளார். மொத்தத்தில் இந்த ஆர்வம் மிக்க பூனையும் அது செய்யும் பானையும் இணையவாசிகளை அந்த பூனையின் ரசிகர்களாகிவிட்டன. 

மேலும் படிக்க | வயசானாலும் சீற்றம் மட்டும் குறையாமல் கர்ஜிக்கும் கிழட்டு சிங்கம்: வைரலாகும் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News