கடந்த ஒரு வாரமாக சமூக ஊடக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் கேரள மாநிலத்தை சேர்ந்த மருத்துவ மாணவ ஜோடி நடனமாடி வெளியிட்ட வீடியோ. அதுமட்டுமல்ல, அதுதொடர்பான விமர்சனங்களும் எதிர் விளைவுகளும் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
மருத்துவ படிப்பு படிக்கும் இரு மாணவர்கள் Boney M’s track Rasputin பிரபல பாடல்களுக்கு அருமையான நடனமாடி அதை சமூக ஊடகஙக்ளில் பதிவிட்டிருந்தனர்.
திருச்சூர் மருத்துவக் கல்லூரியில் படித்த அந்த மாணவனும், மாணவியும் தங்கள் கல்லூரி வளாகத்தில் இருந்த சிறிய மேல் மாடியில் உருவாக்கிய சாதாரண வீடியோ இது. ஆனால் இது ஏன் மிகவும் பிரபலமானது?
Also Read | வாத்தி கம்மிங் பாடலுக்கு டேவிட் வார்னரின் டான்ஸ் வீடியோ வைரல்
நடனத்தின் மீது மோகம் கொண்ட ஜானகி ஓம்குமார் மற்றும் நவீன் ரஜாக் ஆகியோர் தங்களது மூன்றாம் மற்றும் இறுதி ஆண்டு மருத்துவப் படிப்பை படிக்கும் மாணாக்கார்கள். நடனம் மீதான அவர்களின் காதல் வீடியோவை பார்த்தாலே புரியக்கூடியது.
கடினமான மருத்துப் படிப்பின்போது, தங்கள் விருப்பமான நடனத்தையும் விட்டுவிடாமல் தொடர்கின்றனர்.
"எங்கள் இருவருக்கும் அந்த குறிப்பிட்ட பாடல் மிகவும் பிடித்தமானது. எனவே, எங்கள் பிஸியான நேரத்தில் கொஞ்சம் நேஎரம் ஒதுக்கி, பாடலுக்கு நடனமாடி பதிவு செய்தோம்" என்று ஜானகி கூறுகிறார், 30 விநாடிகள் கொண்ட வீடியோ நண்பரின் தொலைபேசியில் படமாக்கப்பட்டு இரண்டு மணி நேரத்தில் தயாரிக்கப்பட்டது.
"நாங்கள் அதை படம்பிடித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டோம், அந்த வீடியோவை பார்த்தவர்கள் மருத்துவ மற்றும் பழைய மாணவர் குழுக்களில் பதிவிட்டனர். பின்னர் அமெரிக்காவைச் சேர்ந்த எனது உறவினர்கள் என்னை அழைத்து பேசினார்கள்.
Also Read | துள்ளிக் குதித்து SRH அணியை உற்சாகப்படுத்திய மர்மப் பெண்ணின் வைரல் வீடியோ
அப்போதுதான் நடன வீடியோ வைரலாகிறது என்று எனக்கு புரிந்தது. சில பிரபலமான சமூக ஊடக பக்கங்கள் வீடியோவைப் பகிரத் தொடங்கிய பிறகு, மேலும் வைரலாகிவிட்டது ”என்று ஜீ ஊடகத்திடம் பேசிய ஜானகி தெரிவித்தார்.
வீடியோ வைரலாகி வந்ததிலிருந்து, ஜானகி மற்றும் நவீனுக்கு பல தொலைபேசி அழைப்புகள் வந்துக் கொண்டேயிருக்கின்றன. செய்தி சேனல்கள் மற்றும் இண்டர்வ்யூவுக்கான கோரிக்கைகள் என தொலைபேசி எப்போதும் ஒலித்துக் கொண்டேயிருப்பதால் நவீன் தனது மொபைல் எண்ணை அணைத்து வைக்க வேண்டியிருந்தது.
அவர்களது வீடியோ வைரலாகத் தொடங்கியதும், சில நபர்கள் இளம் ஜோடியைப் பற்றி ஆட்சேபத்திற்குரிய கருத்துக்களையும் வெளியிடத் தொடங்கினர். இதனால் இருவருக்கும் சில சிக்கல்களும் எழுந்தன. ஆனால் அது கேரள சமுதாயத்தின் தீவிர ஆதரவைக் கொண்டிருந்த இந்த ஜோடியை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை.
மாணவர் சமூகம், மருத்துவக் கல்லூரி மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் இதுபோன்ற பல குழுக்கள் நவீன் மற்றும் ஜனகிக்கு ஆதரவாக இதேபோன்ற நடன வீடியோக்களை வெளியிடத் தொடங்கின.
Also Read | வாட்ச்மேன் டூ IIM பேராசிரியர்: வைரலாகும் இவரின் சாதனை!
ஆட்சேபனைக்குரிய கருத்துகளைப் பற்றி கேட்டபோது, இருவரும் புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என்றும், இதுபோன்ற பிற்போக்குத்தனமான கருத்துக்களுக்கு பதிலளிக்க விரும்பவில்லை என்றும் கூறுகின்றனர். இந்த ஜோடியின் நடவடிக்கைகள் கேரள அரசாங்கத்திற்கும் ஊக்கமளித்துள்ளன.
தடுப்பூசியை ஊக்குவிக்கும் மாநில அரசின் சமீபத்திய வீடியோவில் - கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் அனிமேஷன் செய்யப்பட்ட பதிப்புகளில் இதன் தாக்கத்தைத் தெரிந்துக் கொள்ளலாம்.
சோஷியல் மீடியா பயனர்கள் மருத்துவ மாணவர்களின் ஆர்வத்தைப் பாராட்டினார்கள். பொங்கிப் பெருகும் தொற்றுநோயால், சோர்வாக இருக்கும் ஒரு சவாலான நேரத்தை எதிர்கொள்ளும் நேரத்தில், வீடியோ நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளிக்கிறது என்று பலரும் நம்புகின்றனர்.
Rasputin dance challenge என்ற சவாலை ஏற்றுக் கொண்ட IMA MSN(medical students fraternity) மாணவர்களுக்கு ஜானகியும், நவீனும் இன்ஸ்டாகிராமில் நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
Also Read | கொரோனாவின் அறிகுறிகளைக் குணப்படுத்தும் இவற்றைப் பற்றித் தெரியுமா?
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR