என் தேவதை வந்துட்டா!! தேம்பி அழுத மாப்பிள்ளை, தேற்றிய மணப்பெண், வைரலான வீடியோ

மணமகளும் மணமகனும் அருகருகில் வந்தவுடன், உணர்ச்சி மிகுதியால் ஆட்கொள்ளப்படுகிறார்கள். மணமகன் மணமகளை முத்தமிட்டு அவர் மீது தன் பாசத்தைக் காட்டுகிறார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 21, 2022, 01:29 PM IST
  • ஒரு சுவாரசியமான திருமண வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
  • மணமகன் மணமகளை முத்தமிட்டு அவர் மீது தன் பாசத்தைக் காட்டுகிறார்.
  • வீடியோவில் காணப்படும் காட்சிகள் மிக அழகாக உள்ளன.
என் தேவதை வந்துட்டா!! தேம்பி அழுத மாப்பிள்ளை, தேற்றிய மணப்பெண், வைரலான வீடியோ title=

Viral Video: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் (Social Media) பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் இணையத்தில் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

இந்த வீடியோவில் ஒரு மணமகனும் மணமகளும் தங்கள் திருமணத்தில் அன்பின் மிகுதியால் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருப்பதைக் காண முடிகின்றது. இதில் இருவரும் கதறி அழுவதையும் பார்க்க முடிகின்றது. மனதை கலங்கவைக்கும் இந்த வீடியோவை இதுவரை ஆயிரக்கணக்கானோர் பார்த்துள்ளனர், நூற்றுக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர்.

மணமக்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கதறி அழுதனர்

சில நொடிகளே கொண்ட இந்த வீடியோ வைரலாகி (Viral Video) வருகின்றது. திருமண மண்டபத்தில் மாப்பிள்ளை வீட்டார் வந்துவிட்டதை வீடியோவில் காண முடிகின்றது. மணமகன் மேடையில் அமர்ந்துள்ளார். முதலில் அனைத்தும் சாதாரணமாகவே உள்ளது. 

ALSO READ | பந்தாவா பைக் ஓட்டி பக்காவா மாஸ் காட்டிய மணப்பெண்

மணமகள் வரும்போதுதான் காட்சி மாறி விடுகின்றது. இதன் பிறகு வீடியோவில் நாம் காணும் காட்சிகள் மிகவும் உணர்ச்சிகரமானதாக இருக்கின்றன. மணமகள் மேடையை அடைந்தவுடனேயே, மணமகன் உடனடியாக தனது இடத்தில் இருந்து எழுந்து அவரை நெருங்கி வருவதைக் காண முடிகின்றது. 

மணமகளும் மணமகனும் அருகருகில் வந்தவுடன், உணர்ச்சி மிகுதியால் ஆட்கொள்ளப்படுகிறார்கள். மணமகன் மணமகளை (Bride Video) முத்தமிட்டு அவர் மீது தன் பாசத்தைக் காட்டுகிறார். இதற்குப் பிறகு, இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக்கொண்டு தேம்பித் தேம்பி அழத் தொடங்குகின்றனர். இதன் பிறகு வீடியோவில் காணபடும் காட்சிகள் மிக அழகாக உள்ளன. 

அன்பை எடுத்துக்காட்டும் இந்த அழகான வீடியோவை இங்கே காணலாம் 

இந்த வீடியோ கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. இது Instagram இல் wedding_bells என்ற பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வீடியோவைப் பார்க்கும் அனைவருக்கும் அவர்களையும் மறந்து கண்கள் கலங்குகின்றன.

ALSO READ | அடிச்சிட்டான்யா அடிச்சிட்டான்!! ஆட வந்த பெண்ணுக்கு கிடைத்த அதிர்ச்சி: வீடியோ வைரல் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News