அல்சைமர் நோய் என்பது மூளையின் நினைவாற்றல் ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு குறையத் தொடங்கும் நிலையாகும். மறதி நோய் ஏற்பட்டவர்களுக்கு வேலை செயல்திறன் குறைதல், பேச்சுக்களில் தெளிவின்மை மற்றும் அன்றாட வாழ்வில் செய்வதைக் கூட மறப்பது உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். மறதி நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி தன் வாழ்வில் நடந்த நடக்கும் விஷயங்களை மறந்து விடும் சூழ்நிலை ஏற்படுகிறது. இது 'டிமென்ஷியா' என்றும் அழைக்கப்படுகிறது. இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், வயது ஏற ஏற மூளை செல்கள் படிப்படியாக செயலிழக்க துவங்கி, அல்சைமர் பிரச்னை ஏற்படுகிறது என்கின்றனர்.
அல்சைமர்ஸ் நோய் பாதிப்பில் மூளையில் சில மாற்றங்கள் ஏற்படுவதாக மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் லிமிடெட்டின் நோயியல் நிபுணர் ஆலோசகர் டாக்டர் பவ்யா சக்சேனா, கூறினார். மூளையில் புரதம் சேரத் தொடங்குவதன் காரணமாக மூளை சுருங்கத் தொடங்குகிறது. சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், மூளை செல்கள் இறந்துவிடுகின்றன. இதனால் மூளைக்கு கடுமையான பாதிப்புகள் (Brain Health) ஏற்படுகின்றன. ஆரம்ப கட்டத்தில் குழப்பம், ஞாபக மறதி, வேலையை முடிப்பதில் சிரமம், பார்வை திறன் பாதிப்பு, பேசுவதிலும் எழுதுவதிலும் சிரமம், மறதி போன்ற அறிகுறிகள் தென்படுவதாக ( Alzheimer’s Symptoms) மருத்துவர் பவ்யா தெரிவித்தார். காலப்போக்கில், இந்த அறிகுறிகள் கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கிறார் அவர்.
அல்சைமர் நோய் குறித்த கூடுதல் தகவல்களை அளித்த டாக்டர் பவ்யா சக்சேனா, அல்சைமர் நோய் மனநலத்தை பாதிக்கும் ஒரு நோயாகும், இது பாதிக்கப்பட்ட நபரின் அன்றாட செயல்பாடுகளை பாதிக்கிறது. 2023 ஆம் ஆண்டிலிருந்து மேற்கொண்ட ஆய்வுகளை எடுத்துக் கொண்டால், இந்தியாவில் அல்சைமர் நோய் 60 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களில் 7.4 சதவீதத்தை பாதிக்கிறது என்பது தெரியவந்துள்ளது. உலகளவில் ஏதேனும் ஒரு வகை டிமென்ஷியா நோயால் 5.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறார்.
அல்சைமர் நோய் தீவிரமடைவதற்கு முன் அதற்கு சிகிச்சையளிப்பது மிகவும் அவசியம் என்று மருத்துவர் ஆலோசனை வழங்கியுள்ளார். அல்சைமர் மூளையின் செயல்பாட்டை சீர்குலைத்து, நீரிழப்பு மற்றும் தொற்று போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும், இது சில சமயங்களில் மரணத்திற்கும் காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர் கூறினார். வாழ்க்கை முறையில் மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலம் மறதி நோயை தவிர்க்கலாம் என மருத்துவர் கூறினார்.
மேலும் படிக்க | Brain Health: மூளை மந்தமாக்கும்.... இந்த ஆபத்தான பழக்கங்கள் வேண்டாமே...
அல்சைமர் நோய் ஏற்படாமல் தடுக்க (Alzheimer’s Prevention Tips), மூளையை சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க மூளைப் பயிற்சிகளை வாரத்திற்கு 5 நாட்களாவது செய்ய வேண்டும். புதிர் போன்ற பயிற்சிகள் உதவும். இது தவிர ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த நட்ஸ் மற்றும் விதைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனை உட்கொள்வதால் மூளை ஆரோக்கியமாக இருப்பதுடன் அல்சைமர் நோய் வராமல் தடுக்கப்படுகிறது.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையுடன், இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். இந்த மாற்றங்கள் அனைத்தும் அல்சைமர் அபாயத்தைக் குறைக்க உதவும். அல்சைமர் நோய் முதுமையில் ஏற்படும் மறதியின் ஒரு வடிவமாகக் கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | தொப்பை கொழுப்பை எரிக்கும் ராகி... சில சுவையான ரெஸிபிகள் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ