வெளியானது ஜீவா நடிக்கும் ஜிப்ஸி படத்தின் டிரைலர்

இயக்குனர் ராஜுமுருகன் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ஜிப்ஸி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

Last Updated : May 20, 2019, 12:03 PM IST
வெளியானது ஜீவா நடிக்கும் ஜிப்ஸி படத்தின் டிரைலர் title=

இயக்குனர் ராஜுமுருகன் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ஜிப்ஸி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

பத்திரிகையாளராக இருந்து இயக்குநராக மாறிய ராஜுமுருகன் ’குக்கூ' படம் மூலம் தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்தவர். இதையடுத்து ‘ஜோக்கர்’ என்ற படத்தை இயக்கிய அவர் தேசிய விருது வென்றதோடு, இரண்டே படத்தின் மூலமாக தமிழ் சினிமாவின் தரமான இயக்குநராக உயர்ந்துள்ளார்.

இதனையடத்து ராஜூ முருகன் தனது மூன்றாவது படமாக 'ஜிப்ஸி' என்ற திரைப்படத்தை தற்போது இயக்கி உள்ளார். ஒலிம்பியா பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளரும், மிஸ் இமாச்சல் பிரதேஷ் பட்டம் வென்றவருமான நடாஷா சிங் நடித்துள்ளார். 

 

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. படத்தின் வெளியிட்டு தேதி குறித்து அறிவிப்புகள் வெளியாகவில்லை, விரைவில் இத்திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News