Mysterious King Cobra Viral Video: பாம்பை பார்த்தும் பலரும் அலறி அடித்து ஓடுவார்கள். பாம்பை பார்த்தும் பயப்படாதவர்கள், பதறாதவர்களை காண்பது அரிதுதான். நீங்கள் உங்கள் வாழ்வின் அனைத்து கட்டங்களிலும் சாந்தமானவராகவும், அச்சப்படாதவராகவும் இருந்தாலும் கூட பாம்பு என்ற வார்த்தையை கேட்டாலே மனதுக்குள் ஒரு படபடப்பு வருவதை உணர்வீர்கள். இணையத்தில் கொட்டி கிடக்கும் பல பாம்பு குறித்த வைரல் வீடியோக்களும் (Snake Viral Videoes) பார்ப்போரை அச்சத்தில் ஆழ்த்தும்
அப்படியிருக்க, கர்நாடகாவின் குடியிருப்பு பகுதியில் அதுவும் வீட்டின் படுக்கை அறையில் பதுங்கியிருந்த ராஜ நாகத்தை பார்த்ததும் ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்த சம்பவம் நடந்துள்ளது. படுக்கை அறையின் பரண் மேல் வைக்கப்பட்டிருந்த மரப்பெட்டிக்குள் அந்த 9 அடி நீளம் கொண்ட ராஜ நாகம் மறைந்து இருந்துள்ளது.
9 அடி நீள ராஜ நாகம்
ராஜ நாகத்தை (King Cobra) பார்த்த உடன் குடும்பத்தினர் வனத்துறையை தொடர்புகொண்டு உதவிக்கு அழைப்புவிடுத்துள்ளனர். உடனே வனத்துறை அதிகாரிகள் அகும்பே மழைக்காடு ஆராய்ச்சி நிலையத்திற்கு (ARRS) தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் கிடைத்த உடன் பாம்பை மீட்கும் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
அசால்ட்டாக மீட்ட குழுவினர்
அகும்பே மழைக்காடு ஆராய்ச்சி நிலையத்தின் கள இயக்குநர் அஜய் கிரி இந்த ராஜ நாகத்தை வல்லுநர்கள் பாதுகாப்பாக மீட்டதை வீடியோவாக அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ராஜ நாகத்தை லாவகமாக மீட்கும் அந்த வீடியோவை பார்க்கும்போதே நமக்கு மிரட்சி ஏற்படுகிறது. அந்த வீட்டில் வசிப்பவர்கள் அதிகாரிகளை தொடர்புகொண்ட போதே, யாரும் அந்த பாம்பின் அருகே செல்ல வேண்டாம் எனவும் பாதுகாப்பான தூரத்தில் இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர்.
ராஜ நாகம் வைரல் வீடியோ
அஜய் கிரி அவரது இன்ஸ்டாகிராம் (Instagram Viral Video) பதிவில்,"9 அடி நீள ராஜ நாகம் ஒரு வீட்டின் படுக்கை அறைக்குள் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வீட்டின் உரிமையாளர்கள் அச்சமடைந்து, வனத்துறை அதிகாரிகளை தொடர்புகொண்டனர். ARRS நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உள்ளூர் மக்களுக்கு எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்பது குறித்து விளக்கமளிக்கப்பட்டது. குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்" என குறிப்பிட்டிருந்தார்.
வைரலாகும் ராஜ நாக வீடியோ
மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தை அடைந்த உடன் படுக்கை அறைக்கு சென்று மரப்பெட்டிக்குள் மறைந்திருக்கும் ராஜ நாகத்தை பார்த்து ஆய்வு செய்தனர். பின்னர் அதை பாதுகாப்பாக பிடித்து தங்களின் பொறியில் செல்ல வைத்து, பைக்குள் அதை பிடித்தனர். தொடர்ந்து அதன் எடையை கணக்கிட்டு, பாம்புகள் குறித்து அங்கிருந்த மக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர். தொடர்ந்து அவர்கள் அடர்ந்த காட்டுப் பகுதிக்குச் சென்று அந்த ராஜ நாகத்தை விடுவித்தனர்.
ராஜ நாகத்தை மீட்டதற்கு அங்கிருந்த மக்கள் மட்டுமின்றி இணையத்தில் பல்வேறு தரப்பினரும் மீட்புக் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். எப்படி யார் கண்களுக்கும் சிக்காமல் படுக்கை அறைக்குள் சென்று அந்த மரப்பட்டிக்குள் ராஜ நாகம் ஒளிந்துகொண்டது என்பது யாருக்கும் தெரியவில்லை. ஆக. 15ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த வீடியோ தற்போது வைரலாகி (Viral Video) வருகிறது. இன்ஸ்டாகிராமில் மட்டும் மொத்தம் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர்.
மேலும் படிக்க | நாயை நாக் அவுட் செய்த பூனை.. அலறிய நெட்டிசன்ஸ்: வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ