Dolphin Viral Video: வானவில்லைத் தொடும் டால்பினின் ஹை ஜம்பிங் வீடியோ வைரல்

Rainbow Dolphin Viral Video: அழகிய விலங்குகளின் வீடியோக்கள் மனதை மயக்கி ஈர்க்கின்றன என்றால், சமுத்திரத்தின் அழகிய பின்னணியில் டால்பினின் ஹை ஜம்பிங் வீடியோ வைரலாகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 8, 2023, 11:13 AM IST
  • யாருடன் போட்டிப் போட்டால் நான் தான் ஜெயிப்பேன்
  • டால்பினின் ஹை ஜம்பிங் வீடியோ வைரல்
  • வானவில்லுடன் மல்லுக் கட்டும் டால்பின்
Dolphin Viral Video: வானவில்லைத் தொடும் டால்பினின் ஹை ஜம்பிங் வீடியோ வைரல் title=

வைரலாகும் டால்பின் வீடியோ: நமது அன்றாட வாழ்க்கையின் அங்கமாகிவிட்ட சமூக ஊடகங்கள் தனி உலகமாக இயங்கி வந்தாலும், பல வினோதமான விஷயங்களை தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் உள்ளது. சமூக ஊடகங்களில் வெளியாகும் வித்தியாசமான வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

அதிலும் மிருகங்கள், கடல்வாழ் உயிரினங்கள் என பிற உயிரினங்களின் வித்தியாசமான வீடியோக்களுக்கு என தனி மவுசு உண்டு. பார்ப்பவரை பதற வைக்கும் மிருகங்களின் வேட்டை வீடியோ அனைவரையும் இணையத்தை நோக்கி ஈர்க்கிறது என்றால், அழகிய விலங்குகளின் வீடியோக்கள் மனதை மயக்கி ஈர்க்கின்றன.

மேலும் படிக்க | குழந்தையை கொஞ்சும் குரங்குகள், உருகும் நெட்டிசன்ஸ்: மனதை உருக்கும் வைரல் வீடியோ

கடலில் இருக்கும் டால்பின்களை நாம் அருகில் சென்று பார்க்க முடியாது. அவற்றை பார்க்கவும் ரசிக்கவும், இணையதளம் ஒரு நல்ல வாய்ப்பை வழங்குகிறது. டிவிட்டரில் வைரலாகும் ஒரு வீடியோ அனைவரின் மனதையும் கவர்ந்து வைரலாவதற்கு காரணம் டால்பினின் துள்ளல் மட்டுமா இல்லை, வானவில்லின் அழகா இல்லை இரண்டுமா என்ற பட்டிமன்றமே நடக்கிறது.

டால்பின் வானவில்லுடன் போட்டி போடுவதைப் போல இருக்கும் இந்த வீடியோவைப் பார்த்தால் உங்களுக்கு புரிகிறதா?  

டிவிட்டரில் வைரலாகும் இந்த வீடியோவை லட்சக்கணக்கானவர்கள் பார்த்து ரசித்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதமே வெளியாகியிருந்தாலும், இந்த வீடியோ மீண்டும் அதற்கு காரணம் என்ன என்று கேட்கவே தேவையில்லை. அழகிய கடல்காலம் இது... அழகை ரசிக்க கால நேரம் தேவையா என்ன?

விலங்குக்கும், மனிதனுக்கும் இடையில் உள்ள தொடர்பு என்றென்றும் தொடர்வது, அவற்றின் வாழ்க்கையும் அழகும் நம்முடன் இணைந்து இசைந்து செல்வது என்பதால், அனைவராலும் விரும்பி ரசிக்கப்படுகிறது.

@jaimenhudson என்ற கணக்கில் இருந்து அக்டோபர் 2022 இல் பதிவேற்றப்பட்டிருந்தாலும், வானவில்லுடன் போட்டியிடும் இந்த வீடியோ கிளிப், தற்போது @gunsnrosesgirl என்ற ட்விட்டர் கணக்கில் தற்போது பகிரப்பட்டு வைரல் ஆகிறது. இந்த சிறிய கிளிப்பில், ஆர்ப்பரிக்கும் அலைகளுடன் கூடிய பரந்த நீலக் கடலில் ஒரு டால்பின் குதிப்பதைக் காணலாம். அழகிய இந்த ஓங்கில் ஓங்கிக் குதிக்கும்போது, மேலே உள்ள வானில் தோன்றும் வானவில், நம்மால் கற்பனை செய்து பார்த்திட முடியாத செளந்தர்யத்தைத் தருகிறது.

மேலும் படிக்க | 'ஆஹா...செம டேஸ்ட்': பாம்பை உயிரோடு சாப்பிட்ட நபர், ஷாக் ஆன நெட்டிசன்ஸ், வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News