கட்டிங் செய்ய கம்முனு உட்கார்ந்திருக்கும் பூனையின் வைரல் வீடியோ

கட்டிங் செய்ய கம்முனு உட்கார்ந்திருக்கும் பூனையின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 26, 2022, 01:15 PM IST
  • பூனைக்கு கட்டிங் செய்யும் உரிமையாளர்
  • கம்முனு அமர்ந்திருக்கும் கியூட் பூனை
  • ஒரு மில்லியன் பார்வைகளை கடந்து வைரல்
கட்டிங் செய்ய கம்முனு உட்கார்ந்திருக்கும் பூனையின் வைரல் வீடியோ title=

வீட்டில் இருக்கும் பூனை மற்றும் நாய்க்குட்டிகள் எப்போதும் ஸ்பெஷல் தான். சோம்பேறித்தனமாக இருக்கும் நேரங்களில் அவை இருந்தால் ஜாலியாக பொழுதுபோகும். விளையாட்டு மற்றும் சேட்டைகளுக்கு பூனைகளிடம் எப்போதும் பஞ்சம் இருக்காது. பொதுவாகவே இந்தக் குணங்களைக் பூனை மற்றும் நாய்களை அனைவரும் ரசிப்பார்கள். ஆனால், ஒருபடி மேலேபோய் பூனை மற்றும் நாய்க்குட்டிகள் மீது அதீத அன்பு செலுத்துபவர்களாக இருந்தால், அதற்கு வித்தியாசமான உடை அணிவித்து, அவற்றுடன் ஜாலியாக டூர் செல்வார்கள். 

மேலும் படிக்க | 'யாருப்பா நீ': கார் பைக் பயங்கர விபத்தில் சிக்கி அசால்டாய் நடந்துபோன நபர்: வைரல் வீடியோ

பூனை பிரியர்கள் மற்றும் நாய் பிரியர்கள் என தனியாக குழுக்கள் கூட இருக்கின்றன. அதில் அவற்றை எவ்வாறு மகிழ்ச்சியாக வைத்திருப்பது, அவைகளுக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்? என ஆலோசனைகள் கொடுத்து நன்றாக பராமரித்து வளர்ப்பவர்களும் உள்ளனர். அப்படி பூனைகள் மீது அதீத பிரியம் கொண்ட ஒருவர் செய்த செயலும், அதற்கு பூனை கொடுக்கும் ரியாக்ஷனும் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

அதாவது பூனை ஒன்றுக்கு, அதன் உரிமையாளர் டிரிம் செய்கிறார். அதற்கு பூனையும் அமைதியாக உட்கார்ந்து இருக்கிறது. சீட்டில் இருக்கும் பூனைக்கு மனிதர்கள் கட்டிங் செய்யும்போது எப்படி கழுத்து வரைக்கும் துணிபோட்டு அதன்பிறகு கட்டிங் செய்வார்களோ? அதேபோல் அவர் பூனையை அமர வைத்து கட்டிங் செய்கிறார். இதுதான் இந்த வீடியோவின் ஸ்பெஷல் என்று கூட கூறலாம். பூனையும் அமைதியாக அமர்ந்து கொண்டு இருக்கிறது. அதன் உரிமையாளர் ஜாலியாக கட்டிங் செய்கிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது. டிவிட்டரில் மட்டும் சுமார் 1.2 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது இந்த வீடியோ. கமெண்ட் அடித்துள்ள நெட்டிசன்கள், பூனை அமர்ந்திருக்கும் ஸ்டைல் கியூட்டாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்க | Viral Video: மயில் ஆடி பார்த்திருப்பீங்க; பாடி பார்த்திருப்பீங்க; பறந்து பார்த்திருக்கீங்களா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News