MS Dhoni: ரசிகையின் காலை தொட்ட தோனி! ஷாக்கான நெட்டிசன்கள்.... வைரல் வீடியோ

Down To Earth MS Dhoni: தோனியின் தலைமைப் பண்புகள் மட்டுமல்ல, மனிதாபிமானமும் அனைவரையும் நெகிழ வைக்கிறது... அதற்கான அண்மை சாட்சியாக சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோ

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 17, 2023, 07:51 AM IST
  • அன்புக்கு மரியாதை செய்யும் தல தோனி
  • ரசிகையில் காலில் விழுந்த எம்.எஸ் தோனி
  • தலைவணங்கும் தோனி வீடியோ வைரல்
MS Dhoni: ரசிகையின் காலை தொட்ட தோனி! ஷாக்கான நெட்டிசன்கள்.... வைரல் வீடியோ title=

முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பெயர் உலகம் முழுவதும் பிரபலமானது. அது அவரது கிரிக்கெட் திறமைக்கு மட்டுமானதா? இல்லை என்று நிரூபிக்கும் அவரது குணங்கள், அவரை ஒரு பண்பான மனிதனாக அடையாளம் காட்டுகிறது. அவர் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்கலாம். ஆனால், நல்ல தலைமைப் பண்பு கொண்ட எந்தத் தலைவனுக்கும் ஓய்வு என்பதே கிடையாது. தோனியின் தலைமைப் பண்புகள் மட்டுமல்ல, மனிதாபிமானமும் அனைவரையும் நெகிழ வைக்கிறது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கடந்த  புதன்கிழமை (2023 நவம்பர் 15) உத்தரகாண்ட் மாநிலம் அல்மோராவில் உள்ள லாவாலி கிராமத்தில் உள்ள தனது மூதாதையர் வீட்டிற்கு சென்றார். கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு தனது மனைவி சாக்ஷியுடன் தனது குடும்ப வீட்டிற்கு சென்றார் தோனி. இவர் கடந்த 2004-ம் ஆண்டு தனது பூர்வீக வீட்டிற்கு அவர் சென்றிருந்தார்.

தோனி, தனது மனைவியுடன் தனது சொந்த ஊருக்கு சென்றபோது எடுக்கப்பட்ட  புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தோனியும் அவரது மனைவியும் இருக்கும் வீடியோக்கள் ஆன்லைனில் வைரலானாலும், அதில் ஒருசில வீடியோக்கள் வைரலாகின்றன. அவற்றில் ஒன்று, தோனி தனது கிராமத்தை சேர்ந்த பெண்மணியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது. இந்த வீடியோவிற்கு லட்சக்கணக்கான லைக்ஸ் வந்துள்ளது.

மேலும் படிக்க | பாம்பா இருந்தாலும் பொறுமையா ஹேண்டில் பண்ணலாம்! கிளாஸ் எடுக்கும் கில்லாடி! வீடியோ வைரல்

மற்றுமொரு வீடியோவில் தோனி கிராம மக்களுடன் சேர்ந்து குறுகிய மலைப்பாங்கான பாதையில் நடப்பதைக் காணலாம். மற்றுமொரு வீடியோவில், முன்னாள் கேப்டன் தனது மனைவி மற்றும் அவரது நண்பர் சிமண்ட் லோஹானியுடன் கோவிலில் பூஜை செய்கிறார்.
தோனி தனது ஊருக்கு சென்றபோது குலதெய்வத்திற்கு பூஜை செய்ததாகவும், தனது சொந்த கிராமத்தைச் சேர்ந்த வயதான பெண்களிடம் ஆசிர்வாதம் பெற்ற வீடியோக்களும் வைரலாகின்றன. 

எம்.எஸ். தோனியின் குடும்பம் அல்மோராவின் லாவாலி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். தோனியின் தந்தை பான் சிங் 1970 களில் ராஞ்சியில் உள்ள எஃகு தொழிற்சாலையில் வேலை செய்வதற்காக உத்தரகாண்டின் லாவாலியில் இருந்து குடிபெயர்ந்தார்.  

2004 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகமான தோனி, தனது அமைதியான நடத்தை, விளையாட்டுத் திறமை மற்றும் தலைமைப் பண்புகளால் இந்திய கிரிக்கெட்டின் மறக்க முடியாத கிரிக்கெட்டராக மாறினார். 2007 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஐசிசி உலக டி20 போட்டியின் முதல் பதிப்பில் இந்தியாவை வெற்றிபெறச் செய்தார் தோனி. 2011 ஆம் ஆண்டில் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா அவரது தலைமையில்தான் வென்றது.

மேலும் படிக்க | தீபாவளி அட்ராசிட்டீஸ்! ’உண்மையிலேயே’ பூசை வாங்கறது இதுதானா? மிதி வாங்கும் பக்தர்கள்

(இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோ சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News