காதல் தோல்வி பலரது வாழ்க்கையையும் தடம்புரள செய்யும், ஆனால் இங்கு ஒரு பூனையின் காதல் தோல்வி அதனை கம்பியில் கவலையுடன் உறங்க வைத்திருக்கிறது. இணையத்தில் நிறைந்துள்ள பூனைகளின் அட்டகாசம் பலரது மனதையும் இதமாக்குவதாக அமைந்துள்ளது. நாய், பூனை, கிளி, குரங்கு, யானை போன்ற இன்னும் பிற உயிரினங்கள் விலங்கினமாக கருதப்பட்டாலும் அவை செய்யும் குறும்புகள் மழலைகளின் குறும்புகளை போல ரசிக்கும்படியாக அமைந்திருக்கிறது. அதிலும் சமீப காலமாக பூனைகள் தான் இணையத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது போல என்று நினைக்கும் வகையில், பூனையின் குறும்புகள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.
மேலும் படிக்க | காட்டு ராஜாவுக்கு கிளாஸ் எடுத்த எருமைகள், பல்பு வாங்கிய சிங்கங்கள்: வைரல் வீடியோ
பல வளர்ப்பு பிராணிகளின் அற்புத காட்சிகளை மக்களுக்கு படம்பிடித்து காட்டும் சிசிடிவி இடியட்ஸ் என்கிற ட்விட்டர் பக்கத்தில் தான் இந்த பூனையின் வீடியோவும் பகிரப்பட்டு இருக்கிறது. அந்த வீடியோவில் கிளப்புக்கு வெளியே பூனை ஒன்று கம்பியில் படுத்து இருக்கிறது, அதனருகில் உள்ள நடைபாதையில் பலரும் நடந்து சென்று கொண்டு இருக்கின்றனர். அங்கு பொருத்தப்பட்டு இருக்கும் வண்ண வண்ண அலங்கார விளக்குகளின் ஒளிகள் கம்பியில் படுத்திருக்கும் பூனை மீது பட்டு பூனை வண்ணமயமாக காட்சியளிக்கிறது. நாம் யாருக்கு என்ன தீங்கு செய்தோம், நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்பது போல சோகமே உருவான உருவமாக காணப்படுகிறது.
இணையத்தில் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பூனையை கலாய்த்து வருகின்றனர். இந்த வீடியோ இதுவரை இருபத்தி ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது, அதோடு இதனை பல்லாயிரக்கணக்கான இணையவாசிகள் பார்த்து ரசித்து, பகிர்ந்தும் வருகின்றனர்.
மேலும் படிக்க | குடித்துவிட்டு குத்தாட்டம் போடும் குடிமகனின் வீடியோ வைரல்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR