Video: தகதகவென எரித்த தோனியின் புகைப்படம்; ரசிகர் அளித்த பரிவு

சென்னை சூப்பர் கிங் அணியின் அதிகராப்பூர்வ வலைத்தளமான ட்விட்டரில், ஆர்ட்டிஸ்ட் ராம்சி உருவாக்கிய வீடியோ (dhoni birthday video) பகிரப்பட்டுள்ளது, இதில் ஆர்ட்டிஸ்ட் ராம்சி தீப்பெட்டி குச்சிகளைக் கொண்டு மிக அற்புதமான தோனியின் படத்தை உருவாக்கியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 7, 2021, 03:27 PM IST
Video: தகதகவென எரித்த தோனியின் புகைப்படம்; ரசிகர் அளித்த பரிவு title=

Happy Birthday MS Dhoni: இந்தியாவின் முன்னாள் கேப்டனும், மூத்த வீரருமான மகேந்திர சிங் தோனி தனது 40 வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். சிறந்த கிரிக்கெட் வீரரின் இன்று பிறந்த நாள் (ஜூலை 7 ) என்பதால்,  அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூற ரசிகர்கள், பிரபலங்கள் உட்பட மற்ற கிரிக்கெட் வீரர்கள் சமூக ஊடகங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், ஒரு அவரது ரசிகர் ஆர்ட்டிஸ்ட் ராம்சி (Artist RamC) ஒரு சிறப்பு பரிசை தல தோனிக்கு வழங்கியுள்ளார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

சி.எஸ்.கே பகிர்ந்த வீடியோ:
சென்னை சூப்பர் கிங் அணியின் அதிகராப்பூர்வ வலைத்தளமான ட்விட்டரில், ஆர்ட்டிஸ்ட் ராம்சி உருவாக்கிய வீடியோ (dhoni birthday video) பகிரப்பட்டுள்ளது, இதில் ஆர்ட்டிஸ்ட் ராம்சி தீப்பெட்டி குச்சிகளைக் கொண்டு மிக அற்புதமான தோனியின் படத்தை உருவாக்கியுள்ளார்.

 

அந்த வீடியோவில் ஆர்ட்டிஸ்ட், தீப்பெட்டி குச்சிகளை கொண்டு தோனியின் முகத்தை உருவாக்குகிறார். பிறகு தீக்குச்சிகளை பொருத்துகிறார். அதன் பிறகு தகதகவென எரிகிறது. எரித்த பிறகு சாம்பலை அகற்றிய பின்னர் தோனியின் அழகான படம் காட்சி அளிக்கிறார். இந்த வீடியோவு குறித்து தோனி இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஒருவேளை ஆர்ட்டிஸ்ட் ராம்சி-ஐ தோனி பாராட்டினால் சுவாரஸ்யமாக இருக்கும்.

ALSO READ | #HappyBirthdayDhoni: தோனி ரசிகர்கள் எப்பவுமே மாஸ்! அவர்கள் உருவாக்கிய போஸ்டர்கள்

தோனி பெயரில் பல பதிவுகள்
தோனியின் சாதனைகளைப் (Dhoni's achievements) பற்றி பேசுகையில், அவரது தலைமையில் ஒரு அணி மூன்று ஐ.சி.சி கோப்பைகளையும் வென்றுக்கொடுத்த உலகின் ஒரே கேப்டன் அவர் தான். தோனியின் தலைமையில் 2007 ஆம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை, 2011 அம ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி பட்டங்களை இந்தியா வென்றுள்ளது. இருப்பினும், இப்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உலக ஐசிசி பட்டத்தை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வடிவத்தில் கொண்டு வந்துள்ளது. முதல் முறையாக நடைபெற்ற இந்த சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதின. ஆனால் விராட் கோலியின் கனவை உடைத்து நியூசிலாந்து பட்டத்தை கைப்பற்றியது.

பிறந்தநாளை எளிமையுடன் கொண்டாடுங்கள்
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், "கேப்டன் கூல்" என்று பிரபலமாக அறியப்பட்ட மகேந்திர சிங் தோனிக்கு 40 வயதாகிறது. "கேப்டன் கூல்" என்று பிரபலமாக அறியப்பட்ட தோனி, ஜூலை 7, 1981 அன்று ராஞ்சியில் பிறந்தார். தோனி தனது பிறந்த நாளை எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் எளிமையுடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பது பெரும்பாலும் அனைவருக்கும் தெரியும். தோனி சோஷியல் மீடியாவிலிருந்து தூரமாக இருந்தாலும், அவரது ரசிகர்கள் அவர் மீதான அன்பைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பொழிந்து வருகின்றனர். 

ALSO READ | தோனியின் மறைந்த முன்னாள் காதலியின் போட்டோ வைரல்; புகைப்படத்தில் கசிந்த உண்மை

முழு வீடியோ பார்க்க: 

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News