சனி உதயம்: 5 மார்ச் முதல் இந்த ராசிகளின் தலைவிதி மாறும், அதிர்ஷ்ட மழை பொழியும்

Shani Uday in March 2023: சனி பகவானின் உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்கள் மீதும் இருக்கும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றம் அபரிமிதமான நற்பலன்களை அள்ளித்தரும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 20, 2023, 10:52 AM IST
  • சனி பகவானின் உதயம் துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும்.
  • தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
  • அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
சனி உதயம்: 5 மார்ச் முதல் இந்த ராசிகளின் தலைவிதி மாறும், அதிர்ஷ்ட மழை பொழியும் title=

சனி பகவானின் உதயம் 2023: மக்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிப்பவர் சனி பகவான். எந்த வித பாரபட்சமும் இன்றி கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை அளிப்பதால் அவர் நீதியின் கடவுள் என கருதப்படுகிறார். எத்தனை எத்தனை பிரச்சனைகளை சனி அளிக்கிறாரோ, அதே அளவு மகிழ்ச்சியையும் அவர் அள்ளிக்கொடுக்கிறார். சனி அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுகிறார்.

கிரகங்கள் அவ்வப்போது தங்கள் ராசி மாற்றங்கள் மற்றும் இயக்க மாற்றங்களால் நம் வாழ்க்கையை பாதிக்கின்றன. ஒரு கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகரும் போது, ​​அது அனைத்து ராசிக்காரர்களுக்கும் சுப அல்லது அசுப விளைவுகளை ஏற்படுத்துகிறது. சனி பகவானின் மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் அதிகப்படியான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. 

30 ஆண்டுகளுக்கு பிறகு, திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, சனி பகவான் கும்ப ராசியில் இடம் பெயர்ந்தார். பின்னர் ஜனவரி மாத இறுதியில் சனி அஸ்தமமானார். இதனால், சில ராசிக்காரர்கள் சிரமங்களை சந்திக்க நேரிட்டது. இப்போது சனி பகவான் மார்ச் 5, 2023 அன்று 8.38 மணிக்கு உதயமாகிறார். சனி பகவானின் உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்கள் மீதும் இருக்கும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றம் அபரிமிதமான நற்பலன்களை அள்ளித்தரும். அவர்களுக்கு நல்ல பண வரவு இருக்கும். 

மிதுனம்

சனியின் உதயம் மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். நீங்கள் செய்யும் அனைத்து பணிகளிலும் பலன் கிடைக்கும். வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். பொதுவாக, இந்த காலம் மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும்.

மேலும் படிக்க | VENUS TRANSIT: தங்கத் தட்டில் வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் சுக்கிரன் பெயர்ச்சி! 

சிம்மம் 

சிம்ம ராசிக்காரர்களுக்கு லாட்டரி அடித்தது போன்ற பலன்கள் கிடைக்கும். அனைத்து பணிகளிலும் வெற்றி பெறுவார்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டாகும். இந்த காலகட்டத்தில் புதிய வேலைகளை ஆரம்பிக்கலாம். திருமண வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் இருக்கும்.

துலாம்

சனி பகவானின் உதயம் துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு வெற்றி கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பணிகள் தற்போது நடந்துமுடியும்.

அலுவலகத்தில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பரிபூரண ஆதரவு கிடைக்கும். இது முதலீடு செய்வதற்கு ஏற்ற காலமாக இருக்கும். இந்த காலத்தில் செய்யப்படும் முதலீட்டால், எதிர்காலத்தில் அதிகபட்ச லாபம் கிடைக்கும். 

மீனம்

சனி பகவானின் உதயம் மீன ராசிக்காரர்களுக்கு சுபகாலத்தின் துவக்கமாக இருக்கும். இந்தக் காலக்கட்டத்தில் நீங்கள் எந்த வேலையில் ஈடுபட்டாலும் அதில் வெற்றி கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் வெற்றி பெறுவார்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உருவாகும். இந்த காலத்தில் பல பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தினசரி ராசிபலன்! இன்று அதிஷ்டத்தை அள்ளப்போகும் 4 ராசிகள்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News