சிறிய கயிறுகளால் இணையும் பந்தம்! ஆவணி பெளர்ணமி சிறப்பு... பூணூல் ராக்கி ரக்‌ஷாபந்தன்...

Pournami Pooja August 2024 : மகாலக்ஷ்மியின் அருள் கிடைத்து வீட்டில் சுபிட்சம் நிறைந்திருக்க பௌர்ணமி நாளில் சில மங்களகரமான பொருட்களை வாங்குவதும், சில பொருட்களை தானம் செய்வதும் நல்லது...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 19, 2024, 03:45 PM IST
  • ஆவணி அவிட்டத்தின் முக்கியத்துவம்
  • ஒவ்வொரு மாத பெளர்ணமியும் ஒவ்வொரு தெய்வத்திற்கு உரியது
  • ஆவணி மாத பெளர்ணமி ஹயக்ரீவருக்கு உரியது
சிறிய கயிறுகளால் இணையும் பந்தம்! ஆவணி பெளர்ணமி சிறப்பு... பூணூல் ராக்கி ரக்‌ஷாபந்தன்...  title=

பூரண நிலவு நாளான பெளர்ணமி இறைவழிபாட்டிற்கு உகந்ததாகும். அதிலும் பௌர்ணமி தினத்தன்று அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். பவுர்ணமியில் தினம் விரதம் மேற்கொண்டு, மாலையில் கோவில்களில் அல்லது வீட்டில் சிறப்பு ஆராதனையுடன் தெய்வங்களை வழிபடுவது வழக்கம். பூஜைகள்  முடித்த பிறகு, சந்திர தரிசனம் செய்ய வேண்டும்.

பெளர்ணமியில் இறைவழிபாடு செய்யும்போது, தாமரைப்பூவால் அர்ச்சனை செய்வதும், நெய் கலந்த பருப்பு சாதம் நைவேத்தியம் செய்வது சிறப்பானது. பௌர்ணமி தினத்தில் நிலவை பார்த்து வணங்குவதால், மனம் தொடர்பான சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தியாகும்.

பெளர்ணமி மிகவும் சுபமான நாளாக கருதப்படுவதால், சுப காரியங்களை செய்யத் துவங்குவது மற்றும் சுப காரிய பேச்சு வார்த்தையில் ஈடுபடுவது நல்லது. லக்ஷ்மியின் அருள் கிடைத்து வீட்டில் சுபிட்சம் நிறைந்திருக்க பௌர்ணமி நாளில் சில மங்களகரமான பொருட்களை வாங்குவதும், சில பொருட்களை தானம் செய்வதும் நல்லது.

மேலும் படிக்க | ராகு சனி & சூரியன் மூன்று கிரகங்களும் சேர்ந்து 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் கும்மியடிக்கும்!

இவையெல்லாம், வழக்கமான அனைத்து பெளர்ணமிகளுக்குமானது என்றால், இன்றைய ஆவணி மாத பெளர்ணமி பலவிதங்களில் சிறப்பு வாய்ந்தது. இன்று வேதியர்கள், பிராமணர்கள் புதிய பூணூல் அணிந்து கொள்ளும் நாளாகும். வேதங்கள் உருவான நாள் என்பதால், ஹயக்ரீவர் வழிபாடும் இன்று விசேஷமானது. 

வழக்கமாக பெளர்ணமி நாளன்று செய்யும் தானங்களுக்கும், ஆவணி அவிட்ட நாளன்று செய்யும் தானங்களுக்கும் வித்தியாசம் உண்டு. 
திருமணம் ஆகாத ஆண்கள் பூணூலை குருவிற்கும், வயதில் மூத்தோருக்கும் தானமாகத் தரலாம். இன்றைய தினத்தன்று,தந்தையை இழந்தவர்கள் தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் தர்ப்பணம் செய்த பிறகு தங்களுடைய பிதுர்களுக்கும் தர்ப்பணம் செய்வது விசேஷமானது. இன்று விரதம் இருந்து பூணூல் அணிந்து கொண்டவர்களை துன்பங்கள் நெருங்காது. எதிரிகளே இல்லாத நிலை ஏற்படும். 

ஆவணி பெளர்ணமி சிறப்புகள் 
ஆவணி மாத பௌர்ணமியில் விரதமிருந்து விளக்கேற்றி வழிபட்டால் கடன்கள் தீரும். பண வரவு அதிகரிக்கும். ஆவணி மாத பௌர்ணமியில் அம்பிகையை மனமுருகி வழிபட்டால் கடன் தொல்லைகள் நீங்கி, மகிழ்ச்சியுடன் வாழலாம். ஆவணி மாத பௌர்ணமியில் அம்பிகைக்கு அலங்காரம் செய்து, மணமுள்ள பூக்களை சூட்ட வேண்டும். அதேபோல, ஆவணி பௌர்ணமி தினத்தன்று அன்னை பராசக்தியை வழிபடுவதும், சத்ய நாராயணன் பூஜையை செய்வதும் மிகவும் சிறப்பானதாகும்.

மேலும் படிக்க | ஆகஸ்ட் 26 முதல் செவ்வாய் கிரகத்தால் மோசமாக பாதிக்கப்படும் 3 ராசிகள்! மிதுன செவ்வாய்!

ஒவ்வொரு மாத பெளர்ணமியும் ஒவ்வொரு தெய்வத்திற்கு உரியது ஆகும். மனோகாரகனாக கருதப்படும் சந்திரன், தனது 28 கலைகளுடன் பிரகாசமாக காட்சியளிக்கும் நாள் முழுநிலவு நாளாகும், இந்த பெளர்ணமி நாளில் செய்யும் பூஜைகள் சிறப்பு வாய்ந்தவை. இன்று ஆவணி மாத பெளர்ணமி நாளாகும்.

அவிட்ட நட்சத்திரத்தன்று வரும் பெளர்ணமி நாளான இன்று பூணூல் போட்டுக்கொள்பவர்கள், அதை மாற்றும் நாள். அதேபோல சகோதர-சகோதரிகளின் அன்பை பறைசாற்றும் ரக்‌ஷாபந்தன் நாளாகும். ராக்கி எனப்படும் புனித நூல் மூலம், சகோதரர்கள், தங்கல் சகோதரிகளின் அன்புக்கு கட்டுப்படுவார்கள். ரக்ஷாபந்தன் மூலம் உடன்பிறப்புகள் ஒன்றாக பிணையும் நாள் ஆவணி மாத பவுர்ணமி நாள் ஆகும்.  

மேலும் படிக்க | திருமணத்தடைகளை விலக்கி சுபகாரியங்களுக்கு பிள்ளையார் சுழி போடும் செவ்வாய்ப் பெயர்ச்சி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News