2024 ஜனவரி 26! குடியரசு தின நன்னாள் சோபகிருது தை 12ம் நாளுக்கான ராசிபலன்

Horoscope Jan 26: குடியரசு தின நன்னாளான இன்று, மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலன்களை தெரிந்துகொள்ளலாம்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 26, 2024, 06:14 AM IST
  • மிதுனத்திற்கு வேலையில் முன்னேற்றம்
  • கடகத்திற்கு தொழில் வளர்ச்சி
  • தனுசு ராசியினருக்கு மனதில் நிம்மதி
2024 ஜனவரி 26! குடியரசு தின நன்னாள் சோபகிருது தை 12ம் நாளுக்கான ராசிபலன் title=

2024 January 26 Astrology Predictions:  இன்று வாய்ப்புகள் உங்களுக்கு சாதகமாக உள்ளதா இல்லையா என்பதை அறிந்து அதற்கேற்றாற்போல நாளை திட்டமிட்டால் இந்த நாள் இனிய நாளாக மலரும். அதற்கு ஜோதிட கணிப்புகளை தெரிந்துக் கொள்வோம். 

26-01-2024 சோபகிருது தை 12: ராசிபலன்கள் 

மேஷம் 

செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் விலகும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். முயற்சியில் புதிய அனுபவம் உண்டாகும். சிந்தனைகளில் தெளிவும், புதிய பாதையும் புலப்படும். நண்பர்களின் ஆதரவுடன் சில பணிகளை செய்து முடிப்பீர்கள். இனம்புரியாத தேடல்களால் குழப்பம் ஏற்படும்.  

ரிஷபம்
குடும்பத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களினால் ஆதாயம் உண்டாகும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை செய்து முடிப்பீர்கள்.  வாழ்க்கைத் துணைவரின் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும்.  வெளிவட்டார நட்பு மேம்படும்.  

மிதுனம் 
செயல்பாடுகளில் இருந்துவந்த தாமதங்கள் நீங்கும். தடைபட்ட வரவுகள் கிடைக்கும். உறவினர்களின் மத்தியில் மதிப்பு மேம்படும். வியாபாரத்தில் மேன்மை உண்டாகும்.  ஆகாரத்தில் கட்டுப்பாடு வேண்டும். புதிய பொருட்களின் சேர்க்கை ஏற்படும்.  

கடகம் 
எதிர்பார்த்த சில காரியத்தில் காலதாமதமாகும். திடீர் பயணம் உண்டாகும். எந்தவொரு செயலையும் யோசித்து மேற்கொள்வதால் நன்மை ஏற்படும். கவனக்குறைவால் பணிகளில் தடுமாற்றம் உண்டாகும். அரசு வழியில் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். இணையப் பணிகளில் புதிய வாய்ப்பு உண்டாகும்.    

மேலும் படிக்க | ராகு கேது நட்சத்திர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு 2024 ஆரம்பமே அதிரடி... ராஜயோகம்

சிம்மம் 
எதிர்பார்த்த தனவரவு இழுபறியாகும். சகோதரர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வாகனங்களால் சில விரயங்கள் உண்டாகும். வியாபார முதலீடுகள் அதிகரிக்கும். பயனற்ற கருத்துக்களை தவிர்க்கவும். உத்தியோகத்தில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும்.  

கன்னி 
திடீர் தனவரவுகளால் சங்கடங்கள் நீங்கும். கன்னி ராசிக்காரர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்ப்பு நிறைவேறும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். புதிய சொத்துக்களை வாங்கி மகிழ்வீர்கள். எதையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள்.  

துலாம் 
வியாபாரத்தில் இருந்துவந்த மந்தத்தன்மை விலகும். புதிய செயல்திட்டங்களில் கவனம் வேண்டும். நண்பர்களின் ஒத்துழைப்பால் முன்னேற்றம் ஏற்படும். புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.  

விருச்சிகம்
வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். செலவுக்கு ஏற்ப வரவு உண்டாகும். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். நிலம் தொடர்பான விற்பனையில் சற்று நிதானத்தோடு செயல்படவும். சிலரின் மறைமுகமான ஆதரவுகளால் சில காரியத்தை செய்து முடிப்பீர்கள். 

மேலும் படிக்க | 2024 குரு பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகள் தொட்டதெல்லாம் வெற்றி தான்..!!

தனுசு
மனதில் இனம்புரியாத குழப்பம் தோன்றும். பொருளாதார நெருக்கடியால் சங்கடங்கள் அதிகரிக்கும். முயற்சியில் எதிர்பாராத மாற்றம் ஏற்படும். உடன் இருப்பவர்களால் சில பிரச்சனைகள் ஏற்படும். சூழ்நிலையைப் புரிந்து  அதற்கேற்ப செயல்படவும். 

மகரம்
மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். சகோதரர்களின் வழியில் உதவி கிடைக்கும். நேர்மறையான சிந்தனை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த கவலை குறையும். தெய்வ அனுக்கிரகம் உண்டு.

கும்பம் 
சுபகாரியம் சார்ந்த விரயம் உண்டாகும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். ஆன்மிக காரியங்களால் மன அமைதி கிடைக்கும். தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். பயனற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். பிரியமானவர்களை சந்தித்து மனம்  மகிழ்வீர்கள்.  

மீனம்
சிந்தித்துச் செயல்படுவதால் நன்மை உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். பெற்றோர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பொழுதுபோக்கு செயல்களில் ஆர்வம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.  

மேலும் படிக்க | குருவுடன் ராகு இணைந்தால் ஏற்படுவது குரு சண்டாளா யோகமா இல்லை தோஷமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News