ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுகிறது. இந்த ராசி மாற்றம் மனித வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும், இந்த மாற்றம் சிலருக்கு அதிர்ஷ்டமாகவும் சிலருக்கு துரதிர்ஷ்டமாகவும் இருக்கும்.
அதன்படி ராகு மற்றும் கேது ஆகியவை நிழல் கிரகங்களாகக் கருதப்படுகின்றன, நிழல் கிரகமான கேது 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி துலாம் ராசிக்குள் நுழைந்தார். மேலும் 2023-ம் ஆண்டு வரை அவர் அந்த ராசியிலேயே தான் இருப்பார். கேதுவின் இந்த மாற்றத்தின் பலன் அனைத்து ராசிகளிலும் இருக்கும். சில ராசிக்கு சுப பலனையும், அதேசமயம் சில ராசியினருக்கு அசுப பலனையும் தருவார். எனவே இந்த கேது பெயர்ச்சியில் இந்த 6 ராசியினருக்கு மிகவும் லாபகரமானதாக இருக்கும். அதன்படி இந்த 6 ராசிகள் எவை என்று தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க | ஜூன் மாத ராசிபலன்: இந்த ராசிகளுக்கு ஜூன் மாதம் அமோகமாக இருக்கும், தொட்டது துலங்கும்
ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு கேது கிரகம் ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கிறது. இந்த காலகட்டத்தில் உங்கள் எதிரிகளிடம் வெற்றி பெறுவீர்கள். கடந்த காலத்தில் ஏதேனும் நோய்வாய்ப்பட்டு இருந்தால் அதிலிருந்து விடுபடலாம். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். டாக்டர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் தங்கள் தொழிலில் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தைக் காண்பதால் இந்த பெயர்ச்சி நன்றாக இருக்கும்.
கடகம்: கேது கிரகம் கடகத்தின் நான்காவது வீட்டில் சஞ்சரிக்கிறது. கடக ராசிக்காரர்களுக்கு கேது கிரகத்தின் இந்த நிலை சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் ஒரு புதிய வேலை வாய்ப்பைப் பெறலாம் அல்லது நீங்கள் பதவி உயர்வு பெறலாம். கேதுவின் இந்த சஞ்சாரம் உங்களுக்கு சொத்து மற்றும் வாகன மகிழ்ச்சியையும் அளிக்கும். உத்தியோகம் மாறுவதற்கான வாய்ப்புகளும் உண்டு.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு கேது கிரகம் மூன்றாம் வீட்டில் சஞ்சரித்துக் கொண்டிருந்தது. இந்த காலகட்டத்தில் நீங்கள் உங்கள் வேலையில் சிறப்பு கவனம் செலுத்துவீர்கள். சிம்ம ராசிக்காரர்கள் இந்த பயணத்தின் போது உயர்ந்த இலக்குகளை நிர்ணயித்து அவற்றை வெற்றிகரமாக அடைவார்கள். இந்த காலகட்டத்தில் உங்கள் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.
விருச்சிகம்: கேது கிரகத்தின் இந்த சஞ்சாரம் விருச்சிக ராசியினருக்கும் நல்ல பலன்களைத் தரும். விருச்சிக ராசியின் பன்னிரண்டாம் வீட்டில் கேது சஞ்சரிக்கிறார். இது உங்கள் செறிவு சக்தியை மேம்படுத்துவதோடு உங்களைச் சுற்றியுள்ள விஷயங்களையும் சூழ்நிலைகளையும் நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். இந்த காலகட்டத்தில் நீங்கள் தொலைதூர இடங்களுக்கு அடிக்கடி பயண திட்டமிடுவீர்கள். ஆன்மீக மற்றும் புராண முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குச் செல்லவும் நீங்கள் திட்டமிடலாம்.
மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு கேது கிரகம் மகர ராசிக்கு 11வது வீட்டில் சஞ்சரித்துள்ளார். இது வருமானம் மற்றும் லாப வரம்பு என்று அழைக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து பாராட்டுகளை பெறுவீர்கள். ங்கள் நண்பர்கள் மற்றும் மூத்த உடன்பிறப்புகளுடனான உங்கள் உறவு சுமூகமாக இருக்காது, அவர்களின் புத்திமதி மற்றும் அறிவுரைகளை புறக்கணிக்க முயற்சிப்பீர்கள்.
கும்பம்: கும்ப ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் கேது சஞ்சரித்துள்ளார். கேது கிரகத்தின் பெயர்ச்சி கும்ப ராசியினருக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் சிலர் மூதாதையர் சொத்து அல்லது பரம்பரை சொத்தை சம்பாதிக்கலாம். நீங்கள் பயணங்களை விரும்புவீர்கள், மேலும் வேலை விஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம்.வியாபாரம் தொடர்பான பயணங்களுக்காக வெளிநாடு செல்ல நேரிடும். இது எதிர்காலத்தில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் இந்தக் காலகட்டத்தில் வெற்றி பெறலாம். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )
மேலும் படிக்க | வாழ்க்கையில் நிம்மதி வேண்டுமா: சனீஸ்வரரின் பிறந்தநாளன்று செய்ய வேண்டிய தானங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR