These 2 Zodiac Signs Are Leaving Their Bad Luck In 2024 : 2024 ஆம் ஆண்டு கொடுத்த வரை நம் அனைவருக்குமே ஏற்றத்தாழ்வு அடைந்த ஆண்டாக இருந்தது. இப்போதுதான் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது போல இருந்தது, அதற்குள் அடுத்த ஆண்டே பிறக்கப்போகிறது. இந்த வருடம் பலரது பொறுமையை சோதித்த வருடமாக இருந்தது, சிலருக்கு அதிர்ஷ்டத்தை கொடுத்த வருடமாகவும் இருந்தது. ஒரு சிலர், இந்த வருடம் முடிவதை பார்த்து “போதும்டா சாமி” என கையெடுத்து கும்பிடு பாேட்டு வருகின்றனர். அப்படி கும்பிடுபவர்களுள் இரண்டு ராசிக்காரர்களும் அடங்குவர். பலருக்கும் இது சோதனை காலமாக இருந்திருந்தாலும், இந்த இரண்டு ராசிகளை 2024ஆம் வருடம் ரொம்பவே வாட்டி வதைத்திருக்கிறது. ஆனால், அந்த ராசிகள் தங்களது துரதிர்ஷ்டங்கள் அனைத்தையும் இந்த ஆண்டோடு ஒழித்துக்கட்டிவிட்டு, அடுத்த ஆண்டில் பலவித நல்ல விஷயங்களோடு நுழைய இருக்கின்றன.
துலாம்:
துலாம் ராசிக்காரர்கள், இந்த 2024ஆம் ஆண்டில் நிறைய சவால்களை சந்தித்திருக்கின்றனர். இந்த ஆண்டில் இவர்கள், தங்கள் தவறுகளில் இருந்து பல பாடங்களை கற்றுக்கொண்டதோடு, தனக்கு வராத விஷயங்களையும் முயற்சி செய்து, அதில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் விளங்கி வருகின்றனர். வரும் ஜனவரி 11ஆம் தேதி முதல் இவர்களுக்கு நல்ல காலம் பிறக்க இருக்கிறது.
துலாம் ராசிக்காரர்கள், தன்னை தானே அழித்துக்கொள்ளும் சில பழக்கங்களில் இருந்து விடுபட வேண்டியது அவசியம். இத்தனை நாட்களாக பிறரை மகிழ்வித்து வந்த இவர்கள், இனி தன் மீது மரியாதை வைத்து தன்னை மகிழ்ச்சி படுத்த போகின்றனர்.
இவர்களுக்கு இந்த வருடத்தில், தான் என்ன செய்யப்போகிறோம், எங்கு-எப்படி இருக்கப்போகிறோம் போன்ற விஷயங்களில் முதிர்ச்சி இருக்கும். எதை செய்தாலும் யோசித்து முடிவெடுக்கும் இவர்கள், தேவையற்ற யோசனைகளையும் விட்டொழிக்க போகின்றனர். இனி வரும் 2025 புத்தாண்டு இவர்களுக்காக பல திருப்பங்களை வைத்துக்கொண்டு காத்திருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | கணவருக்கு என்றென்றும் செழிப்பைக் கொண்டுவரக்கூடிய 5 ராசிக்காரர்கள்!
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு, 2024ஆம் ஆண்டு அவர்களின் பொறுமையை சோதித்து, மன அமைதியை அலைக்கழித்த ஆண்டாக ஆகிப்போயிருக்கலாம். இவர்களின் ராசியில் இத்தனை நாட்களாக கெட்ட நேரத்தை கொடுத்து வந்த கிரகங்கள் இப்போது நகர தொடங்கியிருகின்றன. இதற்கு அர்த்தம் 2024ஆம் ஆண்டோடு இவர்களின் சோதனைக்காலம் முடிவடைய போகிறது என்பதுதானே?
இத்தனை நாட்களாக தவறு செய்து, அதிலிருந்து பாடம் கற்று, பின்னர் திருந்தி வாழ்ந்து வந்த இவர்கள், போதும் போதுமெனும் அளவிற்கு பல பாடங்களை கற்று தேர்ந்துவிட்டனர். இவர்களது இந்த கடினக்காலம் இவர்களை வேறு ஒரு ஆளாகவே மாற்றியிருக்கிறது. 2025ஆம் ஆண்டு, இவர்களுக்கு நிறைய ஓய்வு தரும் ஆண்டாக அமையலாம். இவர்களுக்கு அழுத்தம் கொடுத்து வந்த விஷயங்கள், இவர்களின் வாழ்வில் இருந்து விலக இருக்கிறது. எனவே அடுத்த ஆண்டில் தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட ரீதியாகவும் இவர்களால் எந்தவித அழுத்தமும் இன்றி செயல்படவும் மகிழ்ச்சியாக இருக்கவும் முடியும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | மனைவியை ராணி பாேல் பார்த்துக்கொள்ளும் 5 ராசிக்காரர்கள்! யார் யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ