மூத்த குடிமக்களுக்கு அட்டகாசமான ஓய்வூதியத் திட்டம்: மாதம் ரூ.6000 ஓய்வூதியம் கிடைக்கும்

Atal Pension Yojana: அடல் ஓய்வூதிய திட்டத்தில் அதிகபட்சமாக மாதம் 5,000 ரூபாய் மற்றும் ஆண்டுக்கு 60,000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கிறது. அடல் பென்ஷன் யோஜனா (APY) பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முதன்மைத் திட்டமாகும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 25, 2024, 02:05 PM IST
  • அடல் பென்ஷன் யோஜனா.
  • இதன் முக்கிய பலன்கள் என்ன?
  • இதில் சேர தேவையான தகுதி என்ன?
மூத்த குடிமக்களுக்கு அட்டகாசமான ஓய்வூதியத் திட்டம்: மாதம் ரூ.6000 ஓய்வூதியம் கிடைக்கும் title=

Atal Pension Yojana: பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள் என பல தரப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் பிரத்யேகமான நலத்திட்டங்களை நடத்தி வருகின்றது. அவற்றில் மிக பிரபலமான திட்டங்களில் ஒன்று மூத்த குடிமக்களுக்கான அடல் ஓய்வூதியத் திட்டம். அடல் பென்ஷன் யோஜனா என்பது ஏழை மற்றும் அமைப்புசாரா துறை தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ், 60 ஆண்டுகளுக்குப் பிறகு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் கிடைக்கும். 

அடல் பென்ஷன் யோஜனா 

அடல் ஓய்வூதிய திட்டத்தில் அதிகபட்சமாக மாதம் 5,000 ரூபாய் மற்றும் ஆண்டுக்கு 60,000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கிறது. அடல் பென்ஷன் யோஜனா (APY) பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முதன்மைத் திட்டமாகும். இது இந்தியாவின் அனைத்து குடிமக்களுக்கும், குறிப்பாக ஏழைகள், தாழ்த்தப்பட்ட மற்றும் அமைப்புசாராத் துறை தொழிலாளர்களுக்கு ஒரு சமூக பாதுகாப்பு அமைப்பைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டம் 9 மே 2015 அன்று தொடங்கப்பட்டது. இது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) நடத்தப்படுகிறது. 

அடல் ஓய்வூதியத் திட்டம், ஏழை மற்றும் அமைப்புசாரா துறை தொழிலாளர்களுக்கு பெரும் உதவியாக உள்ளது. இத்திட்டம் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதிய பாதுகாப்பை வழங்குகிறது. இதன் மூலம், இது குடும்பத்திற்கு நிதி ஸ்திரத்தன்மையை வழங்குகிறது.

Atal Pension Scheme: பயனாளிகள்

இந்த திட்டத்தில் 2024-25 நிதியாண்டில் இதுவரை 56 லட்சத்திற்கும் அதிகமான புதிய கணக்குதாரர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என நிதி அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன. இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஏழு கோடியைத் தாண்டியுள்ளது. இந்தத் திட்டம் அதன் பத்தாவது ஆண்டில் சமூகத்தின் மிகவும் நலிந்த பிரிவினரை ஓய்வூதியக் காப்பீட்டின் கீழ் கொண்டுவருவதில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

அடல் பென்ஷன் திட்டம்: இதன் முக்கிய பலன்கள் என்ன?

இந்தத் திட்டத்தின் கீழ், பயனாளிகள் 60 வயதிற்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் ரூ.1,000, ரூ.2,000, ரூ.3,000, ரூ.4,000 அல்லது ரூ.5,000 என்ற குறைந்தபட்ச உத்தரவாத ஓய்வூதியத்தைப் பெறுவார்கள். இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் ஓய்வூதியத் தொகை உங்கள் பங்களிப்பைப் பொறுத்தது. 

உதாரணமாக, ஒருவர் ரூ.1,000 மாதாந்திர ஓய்வூதியத்திற்காக 18 வயதில் பணத்தை டெபாசிட் செய்யத் தொடங்கினால், அவர் மாதத்திற்கு ரூ.42 மட்டுமே செலுத்த வேண்டும். ஆனால், 40 வயதில் ரூ.5,000 மாத ஓய்வூதியத்திற்கு, அதிகபட்சமாக மாதாந்திர பங்களிப்பாக ரூ.1,454 செலுத்த வேண்டும். இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், இது 'முழுமையான பாதுகாப்பை' வழங்குகிறது. பயனாளி இறந்தால், அவரது மனைவிக்கும் அதே ஓய்வூதியம் கிடைக்கும். மனைவிக்குப் பிறகு, நாமினி 60 வயது வரை டெபாசிட் செய்யப்பட்ட முழுப் பணத்தையும் திரும்பப் பெறுவார்.

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு வட்டியை அள்ளிக் கொடுக்கும் SBI அம்ரித் விருஷ்டி FD... முழு விபரம் இதோ

Atal Pension Yojana: இதில் சேர தேவையான தகுதி என்ன?

- இந்த திட்டத்தில் 18 முதல் 40 வயது வரை உள்ள அனைத்து இந்திய குடிமக்களும் சேரலாம்.
- விண்ணப்பதாரர் வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டும்.
- வருமான வரி செலுத்துவோர் இந்தத் திட்டத்திற்குத் தகுதியற்றவர்கள்.
- ஓய்வூதியத் தொகையைப் பொறுத்து பங்களிப்புத் தொகை மாறுபடும்.

எப்படி விண்ணப்பிப்பது?

Atal Pension Yojana: இதில் சேர்வதற்கான ஆஃப்லைன் முறை

- முதலில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் உங்கள் வங்கிக்குச் செல்லவும்.
- வங்கியிலிருந்து பதிவு படிவத்தை பெறவும்
- அல்லது அவர்களின் இணையதளத்தில் இருந்து இதை பதிவிறக்கலாம்.
- சரியான தகவலுடன் படிவத்தை பூர்த்தி செய்து ஓய்வூதிய விருப்பத்தை தேர்வு செய்யவும்.
- படிவத்துடன் உங்கள் ஆதார் அட்டை மற்றும் தேவையான பிற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதும், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு செய்தி வரும்.

Atal Pension Yojana: இதில் சேர்வதற்கான ஆன்லைன் முறை

- உங்கள் வங்கி போர்டல் அல்லது மொபைல் பேங்கிங் செயலிக்குச் செல்லவும்.
- உள்நுழைவு ஐடி மற்றும் கடவுச்சொல் மூலம் லாக் இன் செய்ய வேண்டும்.
- ‘Social Security Scheme’ அல்லது ‘Atal Pension Yojana’ என்று தேடவும்.
- விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான அனைத்து விவரங்களையும் வழங்க வேண்டும்.
- மாதாந்திர பங்களிப்பிற்கு ஆட்டோ டெபிட் செய்ய ஒப்புதல் அளிக்கவும்.
- படிவத்தைச் சமர்ப்பிக்கும் முன் விவரங்களைச் சரிபார்த்து, பின்னர் அதைச் சப்மிட் செய்யவும்.

மேலும் படிக்க | Budget 2025: பட்ஜெட்டில் EPFO அதிரடி அரிவிப்பு... ஓய்வூதியம் அதிகரிக்கும், ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News