இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், கிரிக்கெட் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஆகியவை இணைந்து 2014ம் ஆண்டு கடைசியாக சாம்பியன்ஸ் லீக் டி20யில் விளையாடியது. தற்போது இந்த தொடரை மீண்டும் கொண்டு வர கிரிக்கெட் வாரியங்கள் தீவிர பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. பெங்களூருவில் நடந்த இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தி கோப்பையை வென்று இருந்தது சென்னை அணி. சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் இந்தியாவிலிருந்து மூன்று அணியும், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து தலா இரண்டு அணியும், பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் மற்றும் நியூசிலாந்தில் இருந்து ஒரு அணியும் அந்த சமயத்தில் பங்கேற்றன.
மேலும் படிக்க | Mayank Yadav: மயங்க் யாதவின் வேகத்தில் வீழ்ந்த ஆர்சிபியின் மேக்ஸ்வெல், கிரீன்
2009 முதல் 2014 வரை மொத்தம் ஆறு சீசன்கள் சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் விளையாடப்பட்டன, அதில் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா இரண்டு முறை கோப்பையை வென்றுள்ள. ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் அணி ஒருமுறையும், சிட்னியின் சிக்சர்ஸ் அணி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. கிரிக்கெட் விக்டோரியா தலைமை நிர்வாக அதிகாரி நிக் கம்மின்ஸ், தற்போதுள்ள கிரிக்கெட் உலகில் சாம்பியன்ஸ் லீக் போட்டியை நடத்துவது மிகவும் சிரமம் என்றும், அப்படி நடத்தினால் மிகப்பெரிய தொடராக இருக்கும் என்று கூறியுள்ளார். "சாம்பியன்ஸ் லீக் அந்த சமயத்தில் பெரிய தொடராக இருந்தது என்று நான் நினைக்கிறேன். அந்த சமயத்தில் டி20 போட்டிகள் போதிய வரவேற்பை பெறவில்லை.
ஆனால் தற்போது டி20 போட்டிகள் மீதான ஆர்வம் ரசிகர்களுக்கு அதிகம் ஆகி உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையே சாம்பியன்ஸ் லீக் போட்டியை கொண்டு வர பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. உண்மையில், WPL, The Hundred மற்றும் WBBLன் அணிகள் பங்கேற்கும் பெண்கள் சாம்பியன்ஸ் லீக் போட்டியை நடத்துவதற்கும் பேச்சு வார்த்தை உள்ளது. நீங்கள் இந்த தொடரை எப்போது நடத்த போகிறீர்கள் என்பதை பொறுத்து தான் இதன் வெற்றி உள்ளது. ஏனென்றால் அடுத்தடுத்து ஐசிசி போட்டிகள் நடைபெற உள்ளன. இதனால் ஒவ்வொரு அணிகளும் அதில் கவனம் செலுத்தும். ஒருவேளை சாம்பியன்ஸ் லீக்கின் முதல் மறுநிகழ்வு பெண்களுடையதாக இருக்கலாம்.
சாம்பியன்ஸ் லீக்கிற்காக கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைமை நிர்வாக அதிகாரி நிக் ஹாக்லியுடன் தொடர்ந்து பேசி வருகிறேன், ஏனென்றால் அதை மீண்டும் கொண்டு வருவது மிகவும் முக்கியம். மேலும் இது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிடம் பேச வேண்டும். ஆனால் சாம்பியன்ஸ் லீக் போட்டிகளுக்காக நாங்கள் எதிர்பார்ப்பில் இருக்கிறோம். கிரிக்கெட்டின் பரிணாம வளர்ச்சியில் அடுத்த படி இது என்று நினைக்கிறேன்," என்று கம்மின்ஸ் கூறினார். தற்போது உலகில் பல டி20 தொடர்கள் நடைபெற்று வருகிறது. சமூக ஊடகங்களில் இவற்றில் எது பெரியது என்ற சண்டை எப்போதும் இருந்து கொண்டு இருக்கும். ஒருவேளை சாம்பியன்ஸ் லீக் கொண்டு வரப்பட்டால் அதற்கு முற்றுப்புள்ளி இருக்கும். ஐபிஎல், பிஎஸ்எல், பிக் பாஷ் அணிகள் ஒரே தொடரில் விளையாடினால் எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள் என்று கம்மின்ஸ் மேலும் கூறினார்.
மேலும் படிக்க | ரூட்டை மாற்றிய ஆர்சிபி! பிளானை ஓபனாக சொன்ன கேப்டன் டூபிளெசிஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ