இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள 2022ம் ஆண்டிற்கான சம்பள பட்டியலில் அஜிங்க்யா ரஹானே மற்றும் சேதேஷ்வர் புஜாரா ஆகியோர் கிரேடு A-யில் இருந்து B-க்கு தள்ளப்பட்டுள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வரும் ரஹானே, புஜாரா ஆகியோர் தற்போது ரஞ்சி போட்டிகளில் விளையாடி வருகின்றனர். ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கிரேடு A-லிருந்து C-க்கு தரமிறக்கப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க | INDvsSL: 8000 ரன்களை கடந்து விராட் கோஹ்லி சாதனை!
பிசிசிஐ சம்பள பட்டியலை நான்கு பிரிவுகளாக கொண்டுள்ளது. A+ ஆண்டு ஊதியம் ரூ. 7 கோடி, A, B மற்றும் C பிரிவுகளின் மதிப்பு முறையே ரூ.5 கோடி, ரூ.3 கோடி மற்றும் ரூ.1 கோடி ஆகும். கடந்த ஆண்டு, 28 கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள ஒப்பந்தங்கள் வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 27 வீரர்களாக குறைக்கப்பட்டு உள்ளது. ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் A+ வீரர்களாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். கிரேட் A-ல் இருந்த புஜாரா, ரஹானே மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோர் தற்போது இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், கிரேடு B-ல் உள்ளனர்.
முன்னதாக 10 வீரர்களைக் கொண்டிருந்த குரூப் A, இப்போது ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பந்த், கே.எல். ராகுல் மற்றும் முகமது ஷமி ஆகிய 5 பேர் மட்டுமே உள்ளனர். காயத்தால் பாதிக்கப்பட்ட ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, மூத்த தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் ஆகியோர் கிரேடு A-ல் இருந்து C-க்கு மாற்றப்பட்டுள்ளனர். டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்ட கீப்பர் விருத்திமான் சாஹா, குரூப் B-யில் இருந்து C-க்கு மாற்றப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு சம்பள பட்டியலில் இடம்பெற்றிருந்த சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி ஆகியோர் பட்டியலில் இருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளனர். மயங்க் அகர்வால் தற்போது B-யில் இருந்து C-விற்கு மாற்றப்பட்டுள்ளார். முகமது Cராஜ் குரூப் B-யிலும், சூர்யகுமார் யாதவ் குரூப் C-யிலும் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் படிக்க | ஐபிஎல் 2022-ல் சி.எஸ்.கே விற்கு பெரும் பின்னடைவு!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR