India National Cricket Team: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை பரபரப்பாக தொடங்கியிருக்கிறது. பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
2018-19, 2020-21 ஆகிய இரண்டு சுற்றுப்பயணங்களிலும் தொடரை வென்ற இந்திய அணி, தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் பார்டர் - கவாஸ்கர் கோப்பை மீண்டும் முத்தமிட திட்டமிட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக தகுதிபெற 4-0 என்ற கணக்கில் இந்த தொடரை வெல்ல வேண்டும் என்ற என்பதாலும் பெரும் முனைப்போடு விளையாடி வருகிறது எனலாம்.
முக்கியமான அடிலெய்ட் டெஸ்ட்
அந்த வகையில், கிரிக்கெட் ரசிகர்கள் அடுத்த டெஸ்ட் போட்டி எப்போது நடைபெறும் என ஆவலுடன் காத்திருந்தாலும் இன்னும் அதற்கு ஒரு வாரத்திற்கும் மேல் காத்திருக்க வேண்டும். டிச. 6ஆம் தேதிதான் அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது. அடுத்தடுத்து பிரிஸ்பேன், மெல்போர்ன், சிட்னி ஆகிய நகரங்களில் டெஸ்ட் போட்டிகள் நடைபெற இருந்தாலும் அடிலெய்ட் டெஸ்ட் முக்கியமானதாகும்.
மேலும் படிக்க | இந்திய அணி இமாலய வெற்றியை பெற்றது எப்படி...? சீக்ரெட்டை சொன்ன கேப்டன் பும்ரா!
காரணம், அடிலெய்ட் மைதானத்தில்தான் கடந்த முறை இந்திய அணி 36 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அதுவும் பகலிரவு ஆட்டம்தான். எனவே அந்த தோல்விக்கு பழிதீர்க்க இந்தியா முடிவெடுத்தாலும், ஆஸ்திரேலியா இந்த தொடருக்கு தனது ஆதிக்கத்தை தொடங்க அடிலெய்டில் காத்திருக்கிறது எனலாம்.
ரோஹித் சர்மா, கில் உள்ளே...
இந்நிலையில் ரோஹித் சர்மா இந்திய அணியுடன் தற்போது இணைந்துவிட்ட நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு ரோஹித் சர்மாதான் கேப்டன்ஸியை ஏற்றுக்கொள்வார். மேலும், கடந்த போட்டியில் விரலில் எலும்பு முறிவால் பாதிக்கப்பட்ட சுப்மான் கில்லும் தற்போது அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இரண்டு வீரர்கள் அணியில் இருந்து வெளியேற நேரிடும்.
படிக்கல், துருவ் ஜூரேல் வெளியே...
அந்த வகையில், 3ஆவது வீரராக இறங்கிய தேவ்தத் படிக்கல் வெளியேறுவார். அதேபோல் மிடில் ஆர்டரில் விளையாடிய துருவ் ஜூரேலும் வெளியே அமரவைக்கப்படுவார். கேப்டன் ரோஹித் சர்மா ஓப்பனிங்கிலும், சுப்மான் கில் 3ஆவது வீரராகவும் களமிறங்கும்பட்சத்தில் கேஎல் ராகுல் மீண்டும் 5ஆவது அல்லது 6ஆவது வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கலாம்.
வேறு மாற்றம்...?
அதேநேரத்தில், கடந்த போட்டியின் பிளேயிங் லெவனில் இதை தவிர வேறு மாற்றங்கள் நடக்காது. பும்ரா - ஷமி - ஹர்ஷித் ராணா ஆகியோர் அடுத்த போட்டியிலும் தொடர்வார்கள் எனலாம். மேலும், அடுத்த போட்டியில் கூடுதல் ஸ்பின்னர் தேவையில்லை என்பதால் நிதிஷ்குமார் ரெட்டியும், வாஷிங்டன் சுந்தரும் தொடர்வார்கள். அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு அடுத்த போட்டியிலும் வாய்ப்பு கிடைப்பது கடினமாகும்.
இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்
ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ்குமார் ரெட்டி, ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ