2021ஆம் ஆண்டுக்கான ICC மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா

2021ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனையாக, இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 24, 2022, 03:18 PM IST
  • இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா
  • 2021ஆம் ஆண்டுக்கான விருது ஸ்ம்ருதி மந்தனாவுக்கு வழங்கப்படுகிறது
  • 38.86 என்ற சராசரி ரன் விகிதம் வைத்திருக்கிறார் ஸ்ம்ருதி மந்தனா
2021ஆம் ஆண்டுக்கான ICC மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா title=

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 2021ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனையாக அறிவிக்கப்பட்டுள்ளார். மந்தனா 22 சர்வதேசப் போட்டிகளில் 38.86 என்ற சராசரியில் ஒரு சதம் மற்றும் 5 அரை சதங்களுடன் 855 ரன்கள் எடுத்தார்.

2021ஆம் ஆண்டில் கிரிக்கெட்டிற்கான மந்தனாவின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே சென்றது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான வரையறுக்கப்பட்ட ஓவர்கள் தொடரில், இந்தியா சொந்த மண்ணில் 8 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றது.

இரண்டு வெற்றிகளிலும் மந்தனாவின் பங்கு மிகவும் முக்கியமானது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 158 ரன்களைத் துரத்தியபோது, ஆட்டமிழக்காமல் 80 ரன்கள் எடுத்தார் மந்தனா, அது தொடரை சமன் செய்ய உதவியது மற்றும் கடைசி டி20 போட்டியில் ஆட்டமிழக்காமல் 48 ரன்கள் எடுத்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் மந்தனா 78 ரன்கள் குவித்து அபாரமாக ஆடி ஆட்டமிழந்தார். ஒருநாள் தொடரில் இந்திய பெற்ற ஒரே வெற்றியில், ஸ்ம்ருதி மந்தனா 49 ரன்கள் எடுத்தார்.

sports

T20I தொடரில் அவர் 15 பந்துகளில் 29 மற்றும் அரைசதம் விளாசினார், ஆனால் இந்தியா இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரை 2-1 என இழந்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் மந்தனா நல்ல ஃபார்மில் இருந்தார், ODI தொடரில் தொடங்கி, அவர் இரண்டாவது ஒருநாள் போட்டியில் 86 ரன்கள் எடுத்தார். அவர் ஒரே டெஸ்டில் (அவரது வாழ்க்கையின் முதல்) ஒரு அற்புதமான சதத்தை தொகுத்தார், மேலும் ஆட்ட நாயகன் விருதும் (Women in Sports) மந்தனாவுக்கு கிடைத்தது. 

ALSO READ | டென்னிஸ் வீராங்கனைகளின் ஃபேஷன் ஸ்டைல் டிரெண்டிங்

இந்தியாவின் பிங்க்-பால் டெஸ்டில் அறிமுகமான ஸ்மிருதி மந்தனா சதம் அடித்தார். மந்தனா தனது முதல் சதத்தை மிக நீண்ட வடிவத்தில் அடித்து இந்தியாவின் முதல் பிங்க்-பால் டெஸ்டை (Women in Sports) மேலும் மறக்கமுடியாததாக ஆக்கினார்.

மந்தனா, இடது கை ஆட்டக்காரரர் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச கிரிக்கெட்டில் இலக்கை துரத்தும்போது தொடர்ச்சியாக 10 அரை சதங்கள் விளாசியவர் என்ற சாதனையை படைத்தவர் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா.
 
ஜூலை 18,1996ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த ஸ்ம்ருதி மந்தனா, 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கிலாத்திற்கு எதிரான போட்டிகளில் களம் இறங்கினார். ஐ.சி.சி மகளிர் அணியில் இடம்பெற்ற முதல் இந்திய வீராங்கனையான மந்தனாவுக்கு 2018 இல் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீராங்கனை என்ற விருதை பிசிசிஐ வழங்கி சிறப்பு செய்தது. 

ALSO READ | விராட் குடும்பத்தின் தனியுரிமையை மதிக்க வேண்டாமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News