IND vs AUS 4th Test: மெல்போர்ன் டெஸ்ட் போட்டி தொடங்கும் நேரம், இலவசமாக பார்ப்பது எப்படி?

IND vs AUS 4th Test | இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடக்கும் நேரம், இலவசமாக பார்ப்பது எப்படி? என தெரிந்து கொள்ளுங்கள். 

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 25, 2024, 01:28 PM IST
  • இந்தியா ஆஸ்திரேலியா 4வது டெஸ்ட்
  • போட்டி தொடங்கும் நேரம், ஒளிபரப்பு
  • இலவசமாக பார்த்து ரசிப்பது எப்படி?
IND vs AUS 4th Test: மெல்போர்ன் டெஸ்ட் போட்டி தொடங்கும் நேரம், இலவசமாக பார்ப்பது எப்படி? title=

IND vs AUS 4th Test Live Streaming | இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் மூன்று போட்டிகள் முறையே இரு அணிகளும் தலா ஒரு வெற்றியும், ஒரு போட்டி டிராவிலும் முடிந்திருக்கிறது. இந்நிலையில் இந்த சீரிஸை முடிவு செய்யும் நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் டிசம்பர்26 ஆம் தேதியான வியாழக்கிழமை நாளை தொடங்குகிறது. இந்த போட்டி குறித்த முக்கிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.

பார்டர் - கவாஸ்கர் டிராபி இதுவரை

பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. அடிலெய்டில் நடந்த இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. பிரிஸ்பேனில் நடந்த மூன்றாவது போட்டி டிராவில் முடிந்தது. இந்த சூழலில் நாளை நான்காவது போட்டி நடக்க இருக்கிறது. முக்கியமான டெஸ்ட் போட்டி, அதாவது கிறிஸ்துமஸ் விழாவுக்கு அடுத்த நாள் நடக்கும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டி என்பதால் இப்போட்டியை காண சுமார் 1 லட்சம் பார்வையாளர்கள் மைதானத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வார இடைவெளிக்குப் பிறகு இரு அணிகளும் இரண்டு நாட்களில் நேருக்கு நேர் மோதுகின்றன. போட்டியின் லைவ் ஸ்ட்ரீமிங், நேரம் மற்றும் பிற தகவல்களைப் பற்றி பார்க்கலாம்.

மேலும் படிக்க | IND vs AUS: மீண்டும் கேஎல் ராகுலுக்கு செக் வைத்த இந்தியா! 4வது டெஸ்டில் அதிரடி மாற்றம்!

இந்தியா மற்றும் 4வது டெஸ்ட் போட்டி எப்போது, எங்கு நடைபெறும்?

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் டிசம்பர் 26 முதல் 30 வரை நடைபெறுகிறது.

4வது டெஸ்ட் போட்டி தொடங்கும் நேரம்

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு நகரத்துக்கும் ஒவ்வொரு நேரம் இருக்கும். பெர்த்தில் முதல் டெஸ்ட் போட்டி காலை 7.50 மணிக்கு தொடங்கியது. பகலிரவு டெஸ்ட் போட்டி அடிலெய்டில் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. பிரிஸ்பேனில் நடந்த மூன்றாவது போட்டியின் போது, இந்திய நேரப்படி காலை 5:50 தொடங்கியது. மெல்போர்ன் மைதானத்தில் நடக்கும் இந்த டெஸ்ட் போட்டி காலை 5 மணிக்கு தொடங்கும்

காலை அமர்வு: காலை 5 மணி முதல் 7 மணி வரை, உணவு இடைவேளை : காலை 7 மணி முதல் இரவு 7.40 மணி வரை, பிற்பகல் : காலை 7.40 முதல் 9.40 வரை, டீ டைம்: காலை 9.40 முதல் 10 மணி வரை, மாலை அமர்வு: காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை என போட்டிகள் நடக்கும்.

டாஸ் போடப்படும் நேரம்; 

நாளை அதிகாலை 4.30 மணிக்கு டாஸ் போடப்படும்.

இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி லைவ் : 

'பாக்சிங் டே டெஸ்ட்' ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படும். இது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இணையதளம் மற்றும் மொபைல் செயலியிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும். இந்த போட்டி தூர்தர்ஷன் ஸ்போர்ட்ஸிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

4வது டெஸ்ட் போட்டியை எப்படி இலவசமாகப் பார்க்க முடியும்?

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் போட்டியை இலவசமாகப் பார்க்க முடியாது. டிடி ஃப்ரீ டிஷ் உள்ள பார்வையாளர்கள் இந்தப் போட்டியை டிடி ஸ்போர்ட்ஸில் இலவசமாகப் பார்க்கலாம்.

மேலும் படிக்க | சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து குல்தீப் யாதவ் நீக்கம்? அதுவும் இந்த காரணத்திற்காக?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News