Bangladesh vs India: கிரிப்டோகரன்சியை விட இந்திய தேசிய அணி வேகமாக வீழ்ச்சியடைந்து வருகிறது என வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த பிறகு ரோஹித் ஷர்மாவின் இந்திய அணியை முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் கேலி செய்தார். 2015 ஆம் ஆண்டில் எம்எஸ் தோனிக்குப் பிறகு ஒருநாள் தொடரை இழந்த இரண்டாவது இந்திய கேப்டன் ரோஹித் சர்மா ஆவார். லிட்டன் தாஸின் பங்களாதேஷுக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்தியாவின் பேட்டிங் ஆர்டர் தோல்வியடைந்ததால் இந்திய அணி தோல்வியை தழுவியது. முதல் போட்டியில், இந்தியா வெறும் 186 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, ஆனால் இந்திய பந்துவீச்சு நன்றாக இருந்த போதிலும் கடைசி விக்கெட்டில் பங்களாதேஷ் வெற்றி பெற்றது.
Cryptos se bhi tez gir rahi hai apni performance yaar. Need to shake up - wake up.
— Virender Sehwag (@virendersehwag) December 7, 2022
மேலும் படிக்க | ஐபிஎல் 2023-ல் விளையாடப்போவதில்லை! புறக்கணித்த 2 இந்திய வீரர்கள்!
மெஹிதி ஹசனின் அபார அரை சதம் இல்லையென்றால், முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும். இரண்டாவது போட்டியில், இந்திய பந்துவீச்சு தாக்குதல் முதல் போட்டியில் இருந்து தனது ஃபார்மை தொடர்ந்தது. முதல் 20 ஓவர்களுக்குள் 6 பங்களாதேஷ் பேட்ஸ்மேன்களை வீழ்த்தியது, ஆனால் மீண்டும் மெஹிடி ஹசன் மிராஸ் முன்னாள் கேப்டன் மஹ்முதுல்லாவுடன் வலுவாக நின்று பங்களாதேஷை மீண்டும் சிக்கலில் இருந்து வெளியேற்றினார். 2வது ஒருநாள் போட்டியில் மெஹிடி முதல் இன்னிங்ஸின் இறுதி பந்தில் சதம் அடித்து அணிக்கு 271 ரன்கள் குவித்தார். இந்திய பேட்டிங் ஆர்டர் மீண்டும் சொதப்பிய நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் ரன்கள் அடித்தனர். இடது கட்டை விரலில் காயம் ஏற்பட்டதால் ரோஹித் சர்மா டாப் ஆர்டரில் இறங்க வில்லை.
பின்பு ரோஹித் சர்மா இந்திய பேட்டிங் வரிசையில் 9 வது இடத்தில் களமிறங்கி 28 பந்துகளில் 51* ரன்கள் எடுத்தார். இருப்பினும் இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கையில் அடிபட்டும் விளையாடிய ரோஹித் சர்மாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் ஸ்கேன் செய்ய மும்பைக்கு செல்கிறார் ரோஹித்.
மேலும் படிக்க | PainFul Plays: வலியெல்லாம் மேட்டரே இல்லை! காயத்துடன் களம் கண்ட கிரிக்கெட்டர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ