IND vs NZ, 1st Test Day 2: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதன் இன்னிங்ஸில் இந்திய அணி, 345 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, இரண்டாம் நாளான இன்று 345 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
தனது முதல் டெஸ்டில் விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர் (Shreyas Iyer) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சதமடித்தார். இதன் மூலம் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்த 16 வது இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
அவருக்கு பக்கபலமாக விளையாடிய ரவீந்தர் ஜடேஜா (Ravidra Jadeja) 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடக்க வரிசையில் களமிறங்கிய மயங்க் அகர்வால் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், சுப்மான் கில் நிதானமாக விளையாடி 52 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ALSO READ: Kanpur Test: அறிமுக டெஸ்ட்டிலேயே சதம் - ஸ்ரேயாஸ் அய்யர் கலக்கல்
பின்வரிசையில் களமிறங்கிய அஷ்வின், தன் பங்கிற்கு 56 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். கேப்டன் ரகானே 35 ரன்களுக்கும், துணை கேப்டன் புஜாரா 26 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணியில் நட்சத்திர பவுலரான டிம் சவுத்தி 2ம் நாளான இன்று அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை சாய்த்தார். மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ஜடேஜா கூட்டணியை உடைக்க வில்லியம்சன் கடுமையாக போராடினார்.
ஆனால் அவருடைய முயற்சிகளுக்கு நேற்று பலன் கிடைக்கவில்லை. இன்று காலை போட்டி தொடங்கியதும் டிம் சவுத்தி மூலம் இந்த பார்ட்னர்ஷிப்பை பிரித்தார். துல்லியமாக பந்துவீசிய டிம் சவுத்தி, ஸ்ரேயாஸ் அய்யரை கேட்ச் என்ற முறையிலும், ஜடேஜாவை கிளீன் போல்டாக்கியும் வெளியேற்றினார்.
இந்தக் கூட்டணி களத்தில் இருக்கும் வரை இந்திய அணியின் ஸ்கோர் 400 -ஐ எட்டும் என எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்புக்கு சவுத்தி முட்டுக்கட்டைப்போட்டார். சவுத்தியுடன் கூட்டணி அமைத்து சிறப்பாக பந்துவீசிய ஜேமிசன் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். படேல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்தியாவைப் பூர்வீகமாகக்கொண்டு நியூசிலாந்து அணியில் விளையாடும் ரச்சின் ரவீந்திராவுக்கு விக்கெட் எதுவும் கிடைக்கவில்லை. இந்தியாவின் முதல் இன்னிங்ஸூக்குப் பிறகு நியூசிலாந்து அணி பேட்டிங் செய்யத் தொடங்கியுள்ளது.
ALSO READ: ICC: டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகம் பார்க்கப்பட்ட போட்டி எது தெரியுமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR