இந்தியா மற்றும் இலங்கைக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் கடந்த டிசம்பர் 2-ம் நாள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 536 ரன்கள் (ஓவர் 127.5) எடுத்திருந்த நிலையில் டிக்ளர் செய்தது. முதல் இன்னிங்ஸில் முரளி விஜய் 155(267) மற்றும் கேப்டன் விராட் கோலி 243(287) இருவரும் சதம் அடித்தனர். ரோஹித் ஷர்மா 65(102) அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
அதன் பின்னர் ஆடத்தொடங்கிய இலங்கை அணி கருணரத்னே 0(1), சில்வா 1(14) ரன்களில் வெளியேர பின்னர் களமிரங்கிய பெரேராவும் 42(54) ரன்னில் வெளியேறினார். மேத்திவ்ஸ் உடன் சேர்ந்து இலங்கை கேப்டன் சண்டிமல் இருவரும் தங்களது நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.
இதனால் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை 44.3 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தினை இலங்கை தொடர்ந்து விளையாது. மேத்திவ்ஸ் 111(268) ரன்களில் வெளியேற, சமரவிக்ரமா 33(61) ரன்களில் வெளியேறினர். இதற்கிடையில் மற்ற வீரர்களும் சொர்ப ரன்களில் வெளியேற மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை 130 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து நான்கம் நாள் ஆட்டம் நேற்று துவங்கியது!
ஆட்டம் துவங்கிய 5_வது ஓவரில் இலங்கை தனது 10_வது விக்கெட்டையும் இழந்தது. இதனால் இலங்கை அணியால் முதல் இன்னிங்ஸில் 373 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
பின்னர் இந்திய அணி தங்களது 2_வது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர் முரளி விஜய் 9(12) மற்றும ரஹானே 10(37) ரன்களில் வெளியேறினார். பின்னர் தவான் 67(91), புஜாரா 49(66), கோலி 50(58) மற்றும் ரோஹித் ஷர்மா 50(49) ஆகியோரின் நிதானமான ஆட்டத்தால் இந்தியஅ அணியின் ரன்கள் உயர்ந்தது.
இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்திருந்த போது, இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸை டிக்லர் செய்தது. இதனால் 410 ரன்கள் வெற்றி இலக்காக இலங்கைக்கு தரப்பட்டது.
நான்காம் நாளில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி 3 ஓவர்களுக்கு 3 விக்கெட் இழந்து 31 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் இன்று கடைசி நாளான 5-ம் நாள் ஆட்டம் இலங்கை தொடர்ந்து விளையாடி வருகிறது. தனன்ஜெயா டி சில்வா தொடர்ந்து நிதானமாக விளையாடி வருகிறார். அவர் தனது சதத்தை 188 பந்துகளில் பூர்த்தி செய்தார். டெஸ்ட் போட்டியில் இது அவருக்கு மூன்றாவது சதமாகும்.
தற்போதைய நிலவரப்படி, 70 ஓவர் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. இலங்கை வெற்றி பெற இன்னும் 227 ரன்கள் தேவை. இலங்கை அணியிடம் கைவசம் 5 விக்கெட் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா வெற்றி பெற இன்னும் 5 விக்கெட் வீழ்த்த வேண்டியுள்ளது.