Women's T20 World Cup, INDW vs IREW: தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி, அயர்லாந்து அணியுடன் நேற்று (பிப். 20) மோதியது. போட்டி செயிண்ட் ஜார்ஜ் ஓவல் மைதானத்தில் நேற்று மாலை 6.30 மணியளவில் தொடங்கியது.
இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இந்திய அணிக்கு, ஷாஃபாலி வர்மா - ஸ்மிருதி மந்தனா இணை 62 ரன்கள் பார்னர்ஷிப் அமைத்தது. அதில், ஷாஃபாலி 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த, கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மேலும் படிக்க | 'வந்தா ஐபிஎல்-க்கு தான் வருவேன்' - பும்ராவுக்கு என்ன ஆச்சு?
ஒருபக்கம் தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்த நிலையில், ஸ்மிருதி மந்தனா மட்டும் நிலைத்துநின்று விளையாடினார். அரைசதம் கடந்த அவர், 19ஆவது ஓவரில் 87 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்மூலம், இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்துள்ளது. அயர்லாந்து தரப்பில் லாரா டெலானி 3 விக்கெட்டுகளையும், ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
#TeamIndia have marched into the Semi Final of the #T20WorldCup
Well Done! pic.twitter.com/mEbLtYhSm5
— BCCI Women (@BCCIWomen) February 20, 2023
156 ரன்கள் என்ற இலக்குடன் அயர்லாந்து களமிறங்கியது. அந்த அணி 8.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 54 ரன்களை எடுத்தது. அப்போது மழை குறுக்கிட்ட நிலையில், இலக்கு 60 ரன்களாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து, மழை பெய்த நிலையில், 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம், மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றது. அரையிறுதியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்டத்தின் சிறந்த போட்டியாளராக ஸ்மிருதி மந்தனா தேர்வானார்.
மேலும் படிக்க | IPL 2023: முக்கிய வீரர் மீண்டும் காயம்! சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ