IPL 2021, CSK vs DC: டாஸ் வென்ற Delhi Capitals முதலில் பந்துவீச முடிவு

IPL 2021 தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச முடிவெடுத்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 10, 2021, 07:27 PM IST
  • சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையில் முதல் போட்டி இன்று.
  • டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச முடிவெடுத்துள்ளது.
  • சென்னை சூப்பர் கிங்சின் முதல் ஆட்டத்திற்காக அணியின் வீர்ரகளும் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
IPL 2021, CSK vs DC: டாஸ் வென்ற Delhi Capitals முதலில் பந்துவீச முடிவு  title=

IPL 2021, CSK vs DC: IPL 2021 தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 

டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச முடிவெடுத்துள்ளது. 

டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் ஐபிஎல் கேப்டனாக தனது முதல் போட்டியில் டாஸ் வென்றார். மும்பையில் நடக்கும் இன்றைய போட்டியில் முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளார். 

டெல்லியின் நான்கு வெளிநாட்டு வீரர்கள் ஷிம்ரான் ஹெட்மியர், கிறிஸ் வோக்ஸ், மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் டாம் கரன் ஆகியோர் ஆவர்.

CSK அணி தனது அதிரடி ஆட்டத்தை துவக்க முனைப்புடன் இருக்கும் அதே வேளையில், டெல்லி அணி புது கேப்டனின் கீழ் புத்துணர்ச்சியுடன் உள்ளது.

ALSO READ: IPL 2021, CSK vs DC: போட்டிக்கு முன்னால் nets-ல் பட்டையைக் கிளப்பும் தல தோனி, watch video

IPL 2020-ல் சென்னை அணியின் தோல்வியால் பெரும் ஏமாறத்தை அடைந்த CSK ரசிகர்கள் இந்த ஆண்டு தங்கள் அணி வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

டெல்லி கேப்பிடல்சுக்கு எதிரான தங்களது முதல் ஆட்டத்திற்காக சென்னை வீரர்கள் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். வான்கடே மைதானத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ள சென்னை வீரர்கள் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டனர். வலைப் பயிற்சியில் எம்.எஸ் தோனி முழு ஃபார்மில் காணப்பட்டார். அவரது பேட்டிங் அதிரடியாக இருந்தது. 

கடந்த ஆண்டு IPL-ல் தனது கடைசி போட்டியில் ஆடிய தோனி (MS Dhoni), அது தன்னுடைய கடைசி மேட்ச் அல்ல என்பதை அப்போதே தெளிவுபடுத்தினார். அது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளித்தது. 

கடந்த ஆண்டு, IPL வரலாற்றிலேயே முதன் முறையாக சென்னை அணி ப்ளே-ஆஃபிற்கு தகுதி பெறாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று முறை சாம்பியன்களான CSK இந்த முறை தங்கள் தவறுகளை திருத்திக்கொண்டு மீண்டும் அதிரடியாக களமிறங்க முழு முனைப்புடன் உள்ளது. 

IPL வரலாற்றில் மிக வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான தோனி 204 IPL போட்டிகளில் 4632 ரன்கள் எடுத்துள்ளார்.

ALSO READ: பும்ராவிற்காக நீல நிற உடை அணிந்த சஞ்சனா கணேசன்; True Love என ரசிகர்கள் பாராட்டு

Trending News