ஐபிஎல் 2024 ஏலத்தை டிசம்பர் 19 அன்று துபாயில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது மற்றும் அணிகள் தங்கள் தக்கவைக்கப்பட்ட மற்றும் வெளியிடப்பட்ட வீரர்களின் பட்டியலை இறுதி செய்ய நவம்பர் 26 ஆம் தேதியை காலக்கெடுவாக நிர்ணயித்தது. வெளிநாடுகளில் ஐபிஎல் ஏலம் நடத்தப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல்லின் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (CSK) ஐபிஎல் 2024 ஏலத்திற்கு முன்னதாக சில முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளது. 2022ல் பயங்கரமான தோல்விக்கு பிறகு கோப்பையை வென்று சாதனை படைத்தது. தோனியின் தலைமையில், சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக ஐபிஎல் பட்டத்தை வென்றது. இதற்கிடையில், வரவிருக்கும் ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக சென்னை அணி சில வீரர்களை விடுவிக்க முடிவு செய்துள்ளது.
மேலும் படிக்க | அரையிறுதியில் இந்தியா - பாகிஸ்தான்? உலக கோப்பையில் புதிய ட்விஸ்ட்!
பென் ஸ்டோக்ஸ்
இங்கிலாந்தை சேர்ந்த பென் ஸ்டோக்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு 2023 ஐபிஎல் ஏலத்தில் 16.25 கோடிக்கு எடுக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் கிரிக்கெட் உலகின் சிறந்த ஆல்-ரவுண்டராக உள்ளார். அவர் பிராவோவுக்கு பதிலாக அணியில் எடுக்கப்பட்டார். தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பைக்குப் பிறகு பென் ஸ்டோக்ஸுக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் ஐபிஎல் 2024ல் அவர் பங்கேற்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஸ்டோக்ஸ் அடுத்த ஆண்டு விளையாடினாலும், அதிக விலை காரணமாக சிஎஸ்கே அவரை விடுவிக்கக்கூடும். கடந்த 2023 ஐபிஎல்லில் கூட, ஸ்டோக்ஸ் காயம் காரணமாக பெரும்பாலான போட்டிகளை விளையாடவில்லை.
டுவைன் பிரிட்டோரியஸ்
தென்னாப்பிரிக்காவை சேர்ந்த டுவைன் பிரிட்டோரியஸ் 2022ன் மெகா ஏலத்தில் ரூ.50 லட்சத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸில் சேர்ந்தார். ஆல்ரவுண்டர் பிரிட்டோரியஸ் 2022ல், ஆறு ஆட்டங்களில் விளையாடி 157.14 ஸ்டிரைக் ரேட்டுடன் 44 ரன்கள் எடுத்தார். பவுலிங்கில் ஆறு விக்கெட்டுகளையும் எடுக்க முடிந்தது மற்றும் 2023ல் ஸ்டோக்ஸ் வந்ததால் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காயம் காரணமாக ஸ்டோக்ஸ் விளையாடாத போதிலும், ஒரு போட்டியில் மட்டும் விளையாடினார் பிரிட்டோரியஸ். இவரை சிஎஸ்கே அணி தக்க வைத்துக் கொள்ளுமா அல்லது விடுவிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். CSKன் வீரராக பிரிட்டோரியஸின் முக்கிய பிரச்சினை அவர் ஒரு வெளிநாட்டு வீரர் என்பதுதான்.
ஆகாஷ் சிங்
ஐபிஎல் 2023ல் அறிமுகமான துடிப்பான வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் சிங், ஆறு ஐபிஎல் போட்டிகளில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆகாஷ் சிறப்பாக பந்து வீசினாலும், 2024ல் முகேஷ் சவுத்ரி மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் விளையாடுவார்கள் என்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகாஸை வெளியிடக்கூடும்.
சிசண்டா மகலா
சிசண்டா மகலா பெரும்பாலும் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். அவர் தென்னாப்பிரிக்காவுக்காக ஆறு டி20 போட்டிகளிலும், சிஎஸ்கேக்காக இரண்டு ஐபிஎல் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். சிசண்டா மகலா 2023ல் சில போட்டிகளில் விளையாடினார். இரண்டு ஆட்டங்களில், அவர் 8.50 என்ற எகானமி ரேட்டுடன் ஒரு விக்கெட்டை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் மகலா ஐபிஎல் 2024க்கு முன்னதாக சிஎஸ்கே அணியால் விடுவிக்கப்படுவார்.
மேலும் படிக்க | விளையாட வந்தால் அவர் மீது கற்கள் வீசப்படும்... ஏஞ்சலோ மேத்யூஸின் அண்ணன் ஓபன் டாக்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ