அடுத்தாண்டு 15ஆவது ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல நகரங்களில் நடத்தப்பட உள்ளது. கரோனா காரணமாக ஐகிக்ய அரபு அமீரகம் மற்றும் இந்தியாவின் சில நகரங்களில் மட்டும் நடைபெற்றது. தற்போது கரோனா தொற்று அபாயம் குறைந்துள்ளதால், முன்பை போன்று ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் மத்தியில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளன.
வரும் ஐபிஎல் தொடரை முன்னிட்டு இம்மாதம் 23ஆம் தேதி மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் நடைபெறுகிறது. இதில், இந்திய வீரர்கள், வெளிநாட்டு வீர்ரகள் என மொத்தம் 405 வீரர்கள் அன்று ஏலம் விடப்பட உள்ளனர். மொத்தம் 900க்கும் அதிகமான வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க பதிவுசெய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரை விளையாடுவது என்பது பெருமைமிக்கது என்றாலும், முதன்மையானது அதில் கிடைக்கும் சம்பளமும், அதிகம் கவனமும்தான். எனவே, அனைத்து வீரர்களும் போட்டி போட்டுக்கொண்டு ஏலத்தில் பங்கேற்பது வாடிக்கையாகிவிட்டது.
மேலும் படிக்க | 15 ரன்களில் ஆல் அவுட்! RCB-க்கே டப் கொடுத்த அணி!
அந்த வகையில், இந்தியா வங்கதேசம் முதல் டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடி, தனது அதிவேக சதத்தை புஜாரா பதிவு செய்திருந்தார். எனவே, புஜாரா இதேபோன்று தொடர்து அதிரடியாக விளையாட வேண்டும் என்றும், ஐபிஎல் தொடரில் பங்கேற்று இதனை தொடர வேண்டும் எனவும் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், புஜாரா குறித்த இந்த கருத்துக்கு விக்கெட் கீப்பிங் பேட்டர் தினேஷ் கார்த்திக் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.
அவரின் போர்களம் வேறு
"சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், அவருக்கு (புஜாரா) ஐபிஎல்லில் விளையாடுவதில் ஆர்வம் இல்லை என்று நினைக்கிறேன். அவர் ஐபிஎல் தொடரில் விளையாட சில காலம் முயற்சித்துள்ளார். அது அவருக்கு ஏற்ற தொடர் இல்லை என்பதை அவர் உணர்ந்தார்.
அவர் இங்கிலாந்தில் கவுண்டி போட்டிகளில் நிறைய நேரம் செலவழித்து, தனது திறமைகளை மெருகேற்றுகிறார் மற்றும் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுகிறார். அவரது வாழ்க்கையின் இந்த கட்டத்தில், எந்த ஒரு விஷயத்தையும் அவர் நிரூபிக்க வேண்டியது இல்லை. உங்களின் விளையாட்டை நீங்கள் எங்கே ரசிக்கிறீர்கள், தனது பேட்டிங் ஸ்டைலை மக்கள் எங்கே ரசிக்கிறார்கள் என்பதைப் பற்றியதுஇது. அதன் பதில்களை அவர் நன்கு அறிந்தவர், அது அவருக்கு ஐபிஎல் அல்ல.
அவர் கோடையில் இங்கிலாந்துக்கு சென்று கவுண்டியில் விளையாடுகிறார். அதில் அவருக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. அவர் தனக்கென ஒரு முக்கிய இடத்தைக் கண்டுபிடித்துள்ளார். மேலும், அவர் அந்த சமயத்தில் தனது குடும்பத்தையும் அழைத்துச் செல்கிறார்.
கிரிக்கெட் வீரராக நீங்கள் முன்னேற வேண்டிய இடம் இதுதான். உங்களால் வெல்ல முடியாத ஒரு போர் இருப்பதை நீங்கள் உணர்ந்தால், நீங்கள் வேறு போருக்கு செல்ல வேண்டும். அவர் அந்த பாதையில் சென்றார்" என தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.
2014ஆம் ஆண்டு ஏலத்தில் எந்த அணியும் புஜாராவை எடுக்காததால், அவர் அதன்பின் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. இருப்பினும், 2021ஆம் ஆண்டு புஜாராவை சென்னை சூப்பர் கிங்ஸ் எடுத்தது. அந்த ஆண்டிலும் அவர் ஒரு போட்டியை கூட விளையாடாதது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ஐபிஎல் ஒளிபரப்பிலும் கடையை போட்ட ஜியோ! இனி இலவசமாக பார்க்கலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ