IPL 2023: ஐபிஎல் தொடரில் நேற்றைய பரபரப்பான போட்டியில், ஆர்சிபி மிகவும் மோசமான தோல்வியை தழுவியது. மும்பை இந்தியன்ஸ் அணி இதனால் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆர்சிபி அதே பத்து புள்ளியுடன் 7ஆவது இடத்தில் உள்ளார்.
பெங்களூரு அணியின் நேற்றைய தோல்வி தற்போது பல அணிகளுக்கு உதவ வாய்ப்புள்ளது. இன்றைய லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை டெல்லி கேப்பிடல்ஸ் அணி சந்திக்க உள்ள நிலையில், இதில் டெல்லி வெற்றி பெற்றால் அவர்களும் பிளே-ஆப் ரேஸில் இருப்பார்கள். இப்படி நாளுக்கு நாள் பரபரப்புடன் விறுவிறுப்புடன் சென்றுகொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில், சென்னை, மும்பை, பெங்களூரு என அதிக ரசிகர்கள் உள்ள அணிகளின் பிளே ஆப் வாய்ப்பு என்ன, அவர்களின் அடுத்தடுத்த போட்டிகள் குறித்தும் இதில் காணலாம்.
தற்போதைய புள்ளிப்பட்டியலை பார்த்தால் குஜராத் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் என்று மட்டும் தான் உறுதியாக கூற முடியும். 2ஆவது, 3ஆவது இடத்தில் உள்ள அணிகளை கூட இதில் நம்ப முடியாது எனலாம். அந்த அளவிற்கு இந்த தொடர் மிகுந்த கடினமாகியுள்ளது. குறிப்பாக, அனைத்து அணிகளும் தலா 11 லீக் போட்டிகளை விளையாடிவிட்ட நிலையில், இன்னும் தலா 3 போட்டிகள் மட்டுமே அனைத்து அணிகளுக்கும் உள்ளன.
மும்பை நிலைமை என்ன?
நடப்பு சீசனின் இந்த கடைசி மூன்று ஆட்டங்களில் மும்பை வெற்றி பெற்றால், ரோஹித் அண்ட் கோ ஐபிஎல் 2023 புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பெறுவார்கள். மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் நாளை மறுதினம் (மே 10) வான்கடேயில் சந்திக்கிறது. அதன்பின்னர், வரும் செவ்வாய்க்கிழமை (மே 16) ஏகானா ஸ்டேடியத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் மும்பை அணி மோத உள்ளது.
மேலும் படிக்க | ஆண்ட்ரே ரஸ்ஸலின் தொடர் சிக்சர்களுக்கு சூப்பர் ரியாக்ஷன் கொடுத்த ரசிகைகள்
பின்னர், மும்பை இந்தியன்ஸ் தனது கடைசி லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை மே 21ஆம் தேதி அன்று மும்பை வான்கடேவில் சந்திக்கிறது. விளையாடுகிறது. பிளேஆஃப்களுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகளை எளிதாக்க, மும்பை அணி அவர்களின் தற்போதைய நெட் ரன்ரேட்டை (-0.255) கண்டிப்பாக அதிகரிக்க வேண்டும்.
ஈ சாலா கப்...?
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளை, பெங்களூரு அணி தங்களின் அவே மைதானங்களில் சந்திக்க உள்ளன, எனவே அவர்கள் அங்கு வெற்றிபெற்றே ஆக வேண்டிய சூழல் உள்ளது. அதுமட்டுமின்றி, குஜராத் அணியை தங்களின் சொந்த மண்ணான சின்னசாமி மைதானத்தில் சந்திக்க உள்ளது, இந்த போட்டியும் கடினமான ஒன்றுதான் என்பது குறிப்பிடத் தேவையில்லை.
மும்பை இந்தியன்ஸ் அணியுடனான நேற்றைய போட்டியில், பெங்களூரு படுதோல்வி அடைந்ததால் அந்த அணியின் பிளேஆப் கனவு மங்கியுள்ளது. எனவே, அடுத்தடுத்த போட்டிகளில் அதிக ரன்ரேட் மூலம் ஜெயிக்க வேண்டிய கட்டாயம் ஆர்சிபி அணிக்கு அதிகமாக உள்ளது.
சிஎஸ்கே அணிக்கான வாய்ப்பு
மும்பை, பெங்களூரு அணியை விட சற்று பாதுகாப்பான இடத்தில் இருந்தாலும், அந்த இடமும் எப்போது வேண்டுமானாலும் பறிக்கப்பட்டு புள்ளிப்பட்டியலின் அடிவாரத்தை சிஎஸ்கே அணி எட்டும் வாய்ப்பும் தற்போது உள்ளது.
மேலும் படிக்க | CSKvsDC: டெல்லியிடம் தோல்வி அடைந்தால்.. சிஎஸ்கே-க்கு இருக்கும் ஆபத்து!
இன்றைய டெல்லி அணியுடனான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால், அந்த அணியின் பிளே-ஆப் கனவு ஏறத்தாழ உறுதியாகிவிடும். ஏனென்றால், சென்னை - லக்னோ அணியுடனான போட்டி மழை காரணமாக முடிவில்லாமல் தலா 1 புள்ளி இரு அணிகளுக்கு வழங்கப்பட்டது. இதனால், இரு அணிகளும் இரட்டை இலக்கம் இல்லாமல் ஒற்றை இலக்கத்தை பெற்றுள்ளது. லக்னோ அணி சற்று பின்னடைவில் இருப்பதால், இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிஎஸ்கே அணி வெற்றி பெற்றாக வேண்டும்.
மும்பையால் கிடைத்த உத்வேகம்
தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மீதமுள்ள மூன்று ஆட்டங்களில் இரண்டை சேப்பாக்கத்தில் விளையாடுகிறது. சமீபத்தில் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த மும்பை இந்தியன்ஸ் அணியுடனான போட்டியில் சென்னை அசத்தலான வெற்றியை பெற்றது, இது அவர்களுக்கு பெரும் உத்வேகத்தை அளித்திருக்கும்.
இந்த சீசனில், சிஎஸ்கே 11 ஆட்டங்களில் 13 புள்ளிகள் எடுத்துள்ளனர். அவர்கள் நல்ல ரன்ரேட்டை பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு. இந்த சீசனின் இறுதி மூன்று லீக் ஆட்டங்களில் தோல்வியடைந்தாலும், நான்காவது இடத்திற்கு அந்த அணியால் தகுதிபெற முடியும், இருப்பினும் அவை மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியில் அமையும். சிஎஸ்கே அணி, இத்தொடரில் சொந்த மண்ணில் 5 போட்டிகளில் விளையாடி மூன்றில் வெற்றி, இரண்டில் தோல்வி என்ற சாதனையைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | IPL 2023: பிளே ஆஃப்க்கு போட்டி போடும் 10 அணிகள்! யாருக்கு தான் வாய்ப்பு அதிகம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ