லண்டன்: ஓவல் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சில நிமிடங்களில், முன்னாள் இங்கிலாந்து பந்து வீச்சாளர் கிறிஸ் ட்ரெம்லெட், இந்திய அணியின் ஆஃப் ஸ்பின்னரான ஆர்.அஷ்வின் (R. Ashwin) குறித்து பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது இந்திய அணிக்கு அஷ்வின் தேவையில்லை என்று கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.
சலசலப்பை உருவாக்கிய ட்விட்டர் பதிவு:
கிறிஸ் ட்ரெம்லெட் (Chris Tremlett) தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜஸ்பிரித் பும்ரா இருக்கும் அணியில் யாருக்கு அஷ்வின் (Ravichandran Ashwin) தேவை, என்ன ஒரு பவுலிங், அற்புதமாக இந்திய அணி விளையாடியது. பந்துவீச்சு தீவிரமாக இருந்தது எனப் பதிவிட்டுள்ளார். இவரின் பதிவுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Who needs Ashwin when you have Bumrah. What a bowler and well played India Serious bowling display
— Chris Tremlett (@ChrisTremlett33) September 6, 2021
இந்தியா சிறந்த அணி:
மற்றொரு முன்னாள் இங்கிலாந்து வீரர் நிக் காம்ப்டன் (Nick Compton), "காலை வணக்கம் இந்தியா, சிறந்த விடாமுயற்சி மற்றும் அணுகுமுறையுடன் இந்திய அணி விளையாடியது. நான் தவறு செய்துவிட்டேன். எனக்கு அவமானம், ஏன் இப்படி சில்கிறேன் என்றால், இங்கிலாந்து அணி, இந்த போட்டியை டிரா செய்வதற்கான வாய்ப்பும், பலமும் இருந்தது என்று நான் நினைக்கிறேன் எனக் கூறியுள்ளார்.
ALSO READ | லார்ட்ஸ் டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி!
இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், இந்திய அணி கடும் நெருக்கடியிலும் சிறப்பாக விளையாடும் அணி என்று புழந்தார். 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. மைக்கேல் வான் மேற்று (திங்கள்கிழமை), "இந்தியா சிறந்த அணி" என்று கூறினார்.
50 ஆண்டுகளில் இந்தியா இந்த வெற்றியைப் பெற்றது:
கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமையில் இருக்கும் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இல்லாத நிலையில் இந்தியா வெற்றி பெற்றதைக் குறிப்பிட்டு பாராட்டினார். இங்கிலாந்து எழுத்தாளரும் கிரிக்கெட் ஒலிபரப்பாளருமான ஆடம் காலின்ஸ் இந்தியாவின் வெற்றியை "இந்த வெற்றியின் மூலம் இந்தியா மறுபிரவேசம் செய்துள்ளது" என்று கூறினார்.
நான்காவது போட்டி நடைபெற்ற இதே ஓவல் மைதானத்தில் 1971 அஜித் வடேகர் தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் போட்டியில் வெற்றிப் பெற்றது. அதன்பிறகு 50 ஆண்டு கழித்து, மீண்டும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
ALSO READ | இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா உறுதி!
நான்காவது டெஸ்ட் போட்டியில் நடந்தது என்ன?
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 290 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 99 ரன்கள் பின்னிலையில் இந்திய அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக ஆடிய இந்திய அணி 466 ரன்கள் குவித்தது.
368 ரன்கள் அடித்தால் என்ற வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. ஆனால் இங்கிலாந்து அணி 210 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதமூலம் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றது.
ALSO READ | முதல் முறையாக சதம் அடித்து ரோகித் சர்மா அசத்தல்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR