இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய ஆறு அணிகள் மோதும் 15ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ள இந்தத் தொடருக்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி துபாயில் முகாமிட்டுள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி நீண்ட நாட்களுக்கு பின் அணிக்கு திரும்பியுள்ளதால் அவர் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி நீண்ட வருடங்கள் சதம் அடிக்காமல் இருக்கும் கோலி இந்த தொடரில் சதம் அடித்து மீண்டும் ஃபார்முக்கு திரும்புவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.
மேலும், தான் மன ரீதியாக வலிமையாக இல்லை என்று விராட் கோலி சமீபத்தில் பேசியிருந்தார். எனவே அவர் மீண்டும் ஃபார்முக்கு வந்து கிங் கோலியாக ஜொலிக்க வேண்டுமென்பது ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது.
இந்திய அணியானது தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணையை இன்னும் சற்று நேரத்தில் எதிர்கொள்ளவிருக்கிறது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் விராட் கோலிக்கு ஆதரவாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “வாழ்க்கையில் எதுவும் எளிதானது அல்ல. எல்லா இடங்களிலும் சவால்கள் உள்ளன. வாழ்க்கையில் நீங்கள் எப்படி சாதிக்கிறீர்கள், நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களை எப்படி சமாளிப்பது என்பது உங்களுடையது. எனினும், இன்னும் உலக கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் விராட் கோலி. அவரைப் போன்ற ஒரு வீரருக்கு எதிராக நீங்கள் எவ்வாறு போட்டியிடுகிறீர்கள் என்பது மிகவும் முக்கியமானது.
All eyes on @imVkohli who is all set to play his 100th T20I #INDvPAK #AsiaCup2022 pic.twitter.com/uK0nACz3vx
— BCCI (@BCCI) August 28, 2022
ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும், அவர்களின் வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகளைச் சந்திக்க நேரிடும். வெற்றி, தோல்விகள் என்று மட்டும் இல்லை. வாழ்க்கையில் அடிக்கடி உங்களுக்குச் சாதகமாக நடக்காத விஷயங்களைக் கையாள உங்களுக்கு வலிமையான மனநிலை தேவை” என கூறினார்.
மேலும் படிக்க | ‘ஆமா நான் மென்ட்டலி வீக்கா இருக்கேன்’ - உண்மையை உடைத்த கோலி; குவியும் பாராட்டு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ