கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட Sachin Tendulkar முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதி

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 2, 2021, 01:03 PM IST
  • சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதி.
  • சில நாட்களுக்கும் முன்னர் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.
  • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதி.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட Sachin Tendulkar முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதி title=

சில நாட்களுக்கு முன்னதாக, தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை ட்விட்டர் மூலம் தெரிவித்த இந்திய கிரிக்கெட்டின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், தற்போது தான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக மற்றொரு ட்விட்டர் செய்தி மூலம் தெரிவித்துள்ளார். 

இந்தியா 2011 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று இன்றோடு 10 ஆண்டுகள் ஆகிறது. இந்த சந்தர்பத்தில் இந்திய அணிக்கு (Team India) தனது வாழ்த்துகளை தெரிவித்தார் டெண்டுல்கர். அப்போது,  கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் தனது குடும்பத்தினருடன் வீடு திரும்ப உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

“உங்கள் வாழ்த்துக்களுக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி. ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மருத்துவ ஆலோசனையின் படி நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். இன்னும் சில நாட்களில் வீடு திரும்புவேன் என்று நம்புகிறேன். அனைவரும் கவனமாக இருங்கள், அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். உலகக் கோப்பையின் 10 வது ஆண்டு விழாவில் அனைத்து இந்தியர்களுக்கும் எனது அணியினருக்கும் வாழ்த்துக்கள் ”என்று டெண்டுல்கர் ட்வீட் செய்துள்ளார்.

ALSO READ: மாஸ்டர் பிளாஸ்டர் Sachin Tendulkar-க்கு கொரோனா தொற்று: ட்விட்டர் மூலம் செய்தியை பகிர்ந்தார்

முன்னதாக, மார்ச் 27 ஆம் தேதி, லேசான அறிகுறிகள் தென்பட்டதால், தான் பரிசோதனையை மெற்கொண்டதாகவும் தனது பரிசோதனை முடிவுகளில் கொரோனா தொற்று (Coronavirus) உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். சச்சின் டெண்டுல்கரின் (Sachin Tendulkar) குடும்பத்தில் உள்ள மற்ற அனைவரது சோதனை முடிவுகளும் நேர்மறையாக வந்ததாகவும், அவர்களுக்கு தொற்று இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

ALSO READ: Road safety world series 2021: தந்தை சச்சினின் வெற்றியை குதூகலமாய் கொண்டாடிய மகள் சாரா டெண்டுலகர்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News