ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மோசமாக அமைந்த தொடர் என்றால் அது நடப்புத் தொடர்தான்.
லீக் போட்டி முடிவில் கடைசி இடத்தைப் பிடித்துள்ள அந்த அணி ப்ளே ஆப் வாய்ப்பை இழந்து நடையைக் கட்டியுள்ளது. இந்நிலையில் அணித் தேர்வில் சில குழப்பங்கள் இருந்ததாகவும் அவ்வணி மீது சில விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் கிரிக்கெட் ஜாம்பவானும் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகருமான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ஏன் அணிக்கான லெவனில் இடம்பெறவில்லை எனும் கேள்வியும் எழுந்துள்ளது. அர்ஜுன் இரு சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்துவருகிறார்.
மும்பை இம்முறை அடுத்த சுற்று வாய்ப்பையும் இழந்தது. இந்நிலையில் பரிசோதனை முயற்சியாகவாவது அர்ஜுனை ஓரிருமுறை மும்பை அணி களமிறக்கிப் பார்த்திருக்கலாமே என பலர் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்திவருகின்றனர்.
இந்நிலையில் அர்ஜுன் தொடர்பாக மனம் திறந்துள்ளார் சச்சின். அந்த வகையில், “உனது கிரிக்கெட் வாழ்க்கைப் பாதையானது சவாலாகவும் மிகவும் கடினமானதாகவும் இருக்கப்போகிறது. உனக்கு வாய்ப்பு கிடைக்கும் வரை நீ தொடர்ந்து கடினமாக உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும். அதற்கு ஒரு நாள் பலன் கிடைக்கும்” என தனது மகனிடம் கூறியுள்ளாராம் சச்சின்.
மேலும் படிக்க | சவ்ரவ் கங்குலி பயோபிக்: இயக்கப்போவது ரஜினியின் மகளா?!
அர்ஜுனுக்கு அணியில் இடம் கிடைக்காதது பற்றித் தெரிவித்துள்ள சச்சின், “மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆடும் லெவனில் அர்ஜுனைச் சேர்ப்பதோ சேர்க்காமல் இருப்பதோ அணி நிர்வாகத்தின் முடிவு ஆகும். அணித்தேர்வில் நான் ஒரு போதும் தலையிடுவதே கிடையாது” எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க| 2022 ஐபிஎல்: அடேங்கப்பா.. சிக்ஸரில் இப்படியொரு சாதனையா?!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR