WFI தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக தொடரும் மல்யுத்த வீரர்கள் போராட்டம்

Brij Bhushan Sharan Singh vs Wrestlers: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான விசாரணை அறிக்கையை ஏன் பகிரங்கப்படுத்த அரசு தயங்குகிறது? டெல்லியில் தொடரும் போராட்டங்கள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 24, 2023, 11:31 AM IST
  • பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகாருக்கு ஏன் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை?
  • இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான புகார்கள்
  • விசாரணை அறிக்கையை ஏன் பகிரங்கப்படுத்த அரசு தயங்குகிறது?
WFI தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக தொடரும் மல்யுத்த வீரர்கள் போராட்டம் title=

நியூடெல்லி: மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டிருக்கும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் கண்காணிப்புக் குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று மல்யுத்த வீரர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்த குற்றச்சாட்டுகளை விசாரித்த மூத்த குத்துச்சண்டை வீராங்கனை எம்.சி.மேரி கோம் தலைமையில் ஐந்து பேர் கொண்ட ஆய்வுக் குழு அறிக்கையை அளித்துவிட்டது. ஆனால், அதன் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பதும், அறிக்கை வெளியிடப்படவில்லை என்பதன் பின்னணியில் இந்தியாவின் மல்யுத்த வீரர்கள் மேற்கொண்டுள்ள போராட்டம் தலைநகர் டெல்லியில் தொடர்கிறது.

மல்யுத்த வீரர்கள் 7 புகார்களை அளித்துள்ளதாகவும், அவை விசாரிக்கப்பட்டு வருவதாகவும் டெல்லி போலீசார் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் இதுவரை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யாததால் காவல்துறைக்கு டெல்லி மகளிர் ஆணையம் (DCW) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த விவகாரத்தில் ஜனவரி மாதத்திலும் உள்ளிருப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, சாக்ஷி மாலிக், ரவி தஹியா உட்பட மல்யுத்த வீரர்களின் குழுவுடன் மாரத்தான் பேச்சு வார்த்தை நடத்திய மத்திய விளையாட்டு அமைச்சர் அனுராக் தாக்குரின் சமாதானத்தை ஏற்றுக் கொண்டு மூன்று நாட்கள் தொடர்ந்த உள்ளிருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.

மேலும் படிக்க | வில்வித்தை உலகக் கோப்பையில் இந்திய ஆடவர் ரிகர்வ் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது

பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க மூத்த குத்துச்சண்டை வீராங்கனை எம்.சி.மேரி கோம் தலைமையில் ஐந்து பேர் கொண்ட ஆய்வுக் குழுவை அனுராக் தாக்கூர் அறிவித்திருந்தார்.

இந்தியாவின் முக்கிய மல்யுத்த வீரர்களான வினேஷ் போகட், சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் ஏப்ரல் 23, ஞாயிற்றுக்கிழமை புது தில்லி ஜந்தர் மந்தரில் தங்கள் போராட்டத்தை மீண்டும் தொடங்கினார்கள்.

பல ஆண்டுகளாக பாலியல் ரீதியான கொடுமைகளை செய்துவந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்பதன் தொடர்ச்சியாக மல்யுத்த வீரர்களின் போராட்டம் நேற்று ஜந்தர்மந்தரில் மீண்டும் தொடங்கியது.

மேலும் படிக்க | இந்த பிரபல கிரிக்கெட்டர்கள் ஏன் ஐபிஎல் போட்டிகளில் கலந்துக் கொள்ளவில்லை?

கட்சி வேறுபாடு இல்லாம போராட்டத்தில் பங்கேற்க அனைத்துக் கட்சிகளையும் வரவேற்கிறோம் என ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார்.

போராடும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு கொடுப்பது தனது தார்மீக கடமை என்று பஜ்ரங் புனியா கூறினார். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா, 'நாங்கள் அவர்களுடன் நிற்கவில்லை என்றால், வேறு யார் அவர்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள்? அவர்களுக்காக என் உயிரைத் தியாகம் செய்ய வேண்டியிருந்தாலும், அந்த அளவிற்கும் செல்ல நான் தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க | IPL 2023: கோலி கேப்டன்சியில் தொடரும் வெற்றி... மீண்டும் சேஸிங்கில் கோட்டைவிட்ட ராஜஸ்தான்!

டெல்லியில் உள்ள கனாட் பிளேஸ் காவல் நிலையத்தில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது, ஆனால் எஃப்ஐஆர் இன்னும் பதிவு செய்யப்படவில்லை என்பதை ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் உறுதிப்படுத்தினார்.

"ஒரு மைனர் உட்பட ஏழு பெண்கள், பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக டெல்லில் கன்னாட்பிளேஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர், ஆனால் இன்னும் அது தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை. போக்ஸோ வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும். நாங்கள் இரண்டரை மாதங்களாக காத்திருக்கிறோம்..." என சாக்‌ஷி மாலிக் தெரிவித்ததாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

பிரிஜ் பூஷன் சரண் சிங், தற்போது உத்தரபிரதேச மாநிலம் கைசர்கஞ்ச் தொகுதியின் பாஜக எம்.பி என்பது குறிப்பிடத்தக்கது. தன்ம் மீதானகுற்றச்சாட்டுகளை மறுத்த பிரிஜ் பூஷன் சரண் சிங், இந்த குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால் தூக்கு தண்டனைக்கும் தயார் என்று சவால் விட்டுள்ளார்.

மேலும் படிக்க | ஐபிஎல் 2023: அர்ஷ்தீப் சிங்கின் அசுர வேகத்தில் அடுத்தடுத்து இரண்டு முறை உடைந்த ஸ்டம்புகள் - வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News