மருத்துவ படிப்புகளுக்கான தர வரிசை பட்டியலை சென்னையில் சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் இன்று வெளியிட்டார்.
நீட் தேர்வு அடிப்படையில் கவுன்சிலிங்கை உடனடியாக நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை அடுத்து நாளை கவுன்சிலிங் துவங்க உள்ளது.
இந்நிலையில், நீட் தேர்வு அடிப்படையில் இன்று வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலில் ஓசூரை சேர்ந்த மாணவர் சந்தோஷ் என்பவர், (656) மதிப்பெண்களுடன் தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
ரேங்க் பட்டியலில் இடம் பெற்ற மாணவர்கள் விவரம்:-
1 | சந்தோ - ஓசூர் | 656 |
2 | முகேஷ் கண்ணா - கோவை | 655 |
3 | சையத் அபி்ஸ் - திருச்சி | 651 |
4 | ஐஸ்வர்யா சீனிவாசன் - சென்னை | 646 |
5 | ஜீவா - அடையாறு, சென்னை | 645 |
6 | தினேஷ் - வேலூர் | 634 |
7 | கபிலன் - தர்மபுரி | 633 |
8 | கோனா மேரி ராய் - சென்னை | 631 |
9 | அஸ்வின் - தூத்துக்குடி | 630 |
10 | ஆனந்தராஜ்குமார் - நாகர்கோவில் | 630 |
11 | ராஜராஜன் - சென்னை | 628 |
12 | அனஸ்வரா மெரின் - சென்னை | 617 |
13 | ஆன்ஸ்டன் கரார்டு - கேரளா | 615 |
14 | அரவிந்த் - தாராபுரம் | 614 |
15 | எபனேசர் ஸ்டெயினிங் - திண்டுக்கல் | 611 |
16 | அஸ்வதி தீபக் - மதுரை | 608 |
17 | முஸ்டன்சிர் அஸிஸ் கிடாபி - சென்னை | 607 |
18 | மதுசூதனன் - சென்னை | 607 |
19 | அருண்குமார் - கடலூர் | 606 |
20 | காயத்திரி - சென்னை | 601 |
நாளை காலை சென்னை ஓமந்தூரர் அரசு பல் நோக்கு மருத்துவமனையில் உள்ள கூட்ட அரங்கில் கவுன்சிலிங் தொடங்குகிறது. முதலில் சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங்கும், நாளை மறுநாள் (25-ந்தேதி) பொது பிரிவினருக்கான கவுன்சிலிங்கும் நடைபெறுகிறது. விடுமுறை நாட்களிலும் கவுன்சிலிங் நடைபெறும்.
கால அவகாசம் இல்லாததால் கவுன்சிலிங் பற்றிய தகவல் எஸ்.எம்.எஸ். மூலமும், தொலைபேசி மூலமும் மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் 20 இடம் பிடித்தவர்களில் 15 பேர் மாணவர்கள், 5 பேர் மாணவிகள்.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவ படிப்புக்கு 3,534 இடங்கள் உள்ளன. இதற்கு மொத்தம் 31,629 விண்ணப்பங்கள் வந்துள்ளன.
மாநில பாடத்திட்டத்தில் படித்த 27,488 பேரும் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படித்த 3,418 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
இது தவிர ஐ.எஸ்.சி.இ. பாடத்திட்ட மாணவர்கள் 207 பேரும், மற்ற பாடத்திட்ட மாணவர்கள் 514 பேர் பழைய மாணவர்கள் 5,66 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர 18,040 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 14,993 பேர் மாநில பாடத் திட்டத்திலும், 3,371 பேர் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்திலும், 237 பேர் ஐ.எஸ்.சி.இ. பாடத் திட்டத்திலும், இதர பாடத் திட்டத்தில் படித்த 1,643 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
தனியார் மருத்துவ கல்லூரி சேர்க்கைக்கான 10 ரேங்க் பட்டியல்:-
1 | ஜெயீ மிலின்ட் நாயக் | ஐதராபாத் |
2 | கிரிடின் மெக்ரோத்ரா | ஐதராபாத் |
3 | பரிநிதி கில்லான் | குர்கான் |
4 | அன்ச சாரா சாஜி பனாகல் | கேரளா |
5 | அதுல் மேத்ய | கேரளா |
6 | ஜோனா மேரி ராய் | சென்னை |
7 | சேதி ஆகாஷ் | பரோடா |
8 | ரியா ஆன் பிலிப் | திருவனந்தபுரம் |
9 | எல்தோ பி.இலியாஸ் | கேரளா |
10 | பிரனீத் யெர்னேனி | விஜயவாடா |