கணக்கெடுப்பு பணிகள் முடிந்தபிறகு வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2000 வழங்கப்படும் என தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
கடந்த சில நாட்களாக தமிழக அரசை எதிர்க்கட்சிகளும், நடிகர்களும் கடுமையாக குற்றசாட்டு வருகின்றனர். இதனால், தமிழக அரசியலில் சற்று சலசப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 2021 ல் எந்த அடிப்படையில் அதிசயம் நிகழும் என ரஜினி கூறினார் என தெரியவில்லை. ஒருவேளை அதிமுக ஆட்சி மலரும் என்பதை தான் அதிசயம் என கூறியிருக்கலாம் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ‘2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அதிசயத்தை நிகழ்த்திக் காட்டுவார்கள்’ என்று தெரிவித்தார். இந்தநிலையில், இது குறித்து தூத்துக்குடி விமான நிலையத்தில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில்; ‘எந்த அடிப்படையில் 2021 ஆம் ஆண்டில் அதிசயம் நிகழும் என நடிகர் ரஜினி கூறுகிறார் என்று தெரியவில்லை. ரஜினி கட்சி தொடங்கிய பிறகே அவரை பற்றியும், அவரது கருத்தை பற்றியும் விரிவாக கூற முடியும்.
2021 ஆம் ஆண்டில் அ.தி.மு.க அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று நடிகர் ரஜினி கூறியிருக்கலாம். 2021-ம் ஆண்டில் அ.தி.மு.கவைச் சேர்ந்த ஒருவரே முதல்வர் வேட்பாளராக இருப்பார். உள்ளாட்சி அமைப்புகளில் மறைமுகத் தேர்தலை கொண்டு வந்தவர் மு.க.ஸ்டாலின் தான். அவரே அதை எதிர்ப்பது விந்தையாக உள்ளது’ என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில்; "உள்ளாட்சி தேர்தலில் நாடாளுமன்ற தேர்தலில் இருந்த அதிமுக கூட்டணியே தொடரும். உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. சட்டசபை இடைத்தேர்தல் போல உள்ளாட்சி தேர்தலிலும் நாங்கள் போட்டியிடுவோம். உள்ளாட்சி தேர்தலில் மறைமுக மேயர் தேர்தல் என்பது திமுகவின் திட்டம்தான். ஆனால் இப்போது ஏன் திமுக தலைவர் ஸ்டாலின் அதை எதிர்க்கிறார் என்று தெரியவில்லை. இப்போது ஏன் ஸ்டாலின் திடீர் என்று மனம் மாறிவிட்டார் என்று தெரியவில்லை" என தெரிவித்துள்ளார்.