ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், அவரது மகன் குற்றவாளியாக சேர்ப்பு

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக சிபிஐ தரப்பில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 19, 2018, 07:12 PM IST
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், அவரது மகன் குற்றவாளியாக சேர்ப்பு title=

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக சிபிஐ தரப்பில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 2006-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது மத்திய நிதி அமைச்சகம் விதிக்கு புறம்பாக மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு 3,500 கோடி ரூபாய் ஏர்செல் நிறுவனத்தில் முதலீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. அப்பொழுது மத்திய நிதி அமைச்சராக பா. சிதம்பரம் இருந்தார். மேக்சிஸ் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டதில் கார்த்தி சிதம்பரம், தன் தந்தையின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி உள்ளார் என்ற குற்றசாட்டு எழுந்தது. 

இதுதொடர்பாக டெல்லி பட்டியாலநீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவும், சிபிஐயும் வழக்கு நடத்தி வருகிறது. இன்று நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது. இதில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் பெயர்களும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

Trending News