கொரோனா முழு அடைப்பு காலம் முடியும் வரை இனி வீடியோ-அழைப்புகள் மூலம் மட்டுமே வழக்குகள் விசாரிக்கப்படும், மேலும் உத்தரவு வரும் நீதிமன்ற அரங்குகளில் நீதிபதிகள் அமர்ந்து வழக்குகள் விசாரிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை நீதியரசர் AP சாஹியின் ஆலோசனையைத் தொடர்ந்து மெட்ராஸ் உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் C குமாரப்பன் ஞாயிற்றுக்கிழமை இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மெட்ராஸ் உயர்நீதிமன்ற அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான ஒரு நாள் கழித்து இந்த அதிரடி உத்தரவு வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
READ | உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து வல்லூர் அனல்மின் நிலையம் மூடல்!
இதுதொடர்பான அறிவிப்பில்., "COVID-19 -ன் தற்போதைய நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, எந்தவொரு தொற்றுநோயும் பரவாமல் தடுப்பதில் இருந்து உயர்நீதிமன்றத்தின் வளாகத்தை முழுமையாகப் பாதுகாப்பதற்காக, உயர்நீதிமன்றத்தில் அனைத்து நீதித்துறை நடவடிக்கைகளும் வீடியோ-அழைப்புகள் மூலம் மட்டுமே நடத்தப்படும். பூட்டுதல் காலத்தில் நீதிமன்ற அரங்குகள் எந்தவொரு நீதித்துறை செயல்பாடுகளுக்கும் அணுகப்படாது, நீதிமன்ற அரங்குகள் சுத்திகரிக்கப்படவும், எதிர்கால பயன்பாட்டிற்கு சுகாதாரமாகவும் பொருந்தும்," என்று அந்த தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகள் R.சுப்பையா மற்றும் R.போங்கியப்பன் ஆகியோர் அடங்கிய வழக்குகள் ஏப்ரல் 19 முதல் 26 வரை டிவிஷன் பெஞ்சின் தற்போதைய ஏற்பாடுகளுக்கு மேலதிகமாக நீதிபதிகள் M சத்தியநாராயணன் மற்றும் M நிர்மல் குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்சிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் மற்றொரு வெளியீடு தெரிவித்துள்ளது.
READ | தடையில்லா மின்சாரம் வழங்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது!
முன்னதாக, மெட்ராஸ் உயர்நீதிமன்ற அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும், ஊழியர் பங்கேற்ற விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜரான இன்னும் சிலருக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என்ற அச்சத்தில் கொரோனா பரிசோதனை செய்யும்படி கேட்கப்பட்டது எனவும் செய்திகள் வெளியாகின. இதற்கிடையில், மெட்ராஸ் உயர் நீதிமன்றமும் நீதிமன்றத்தின் கோடை விடுமுறையை நிறுத்தி வைக்கும் அறிவிப்பை வெளியிட்டது.