சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில், பாதிக்கப்பட்ட இருவரையும் காவல்நிலையத்தில் அடித்து துன்புறுத்தியதோடு, உயிரழந்த பின்னர் ஆவணங்களை மாற்றியதாகவும் சிறப்பு சார்பு ஆய்வாளர் சாட்சியம் அளித்தார். நீதிபதி, டிசம்பர் 21ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்கிஸ் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்டனர். விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.
போலீசார் விசாரணையில் தந்தையும் மகனும் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின்கீழ் தொடரடப்பட்ட வழக்கில் ,சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட ஒன்பது பேர் மீது சிபிஐ குற்றபத்திரிக்கை தாக்கல் செய்தது.
Also Read | சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையானது இன்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி பத்மநாபன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
விசாரணைக்கு ஆஜரான சிறப்பு சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணிபுரிந்தவர். அவர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். சாத்தான்குளத்தில் வணிகம் செய்துவந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸை சாத்தான்குளம் காவல்நிலையத்தில் வைத்து காவல்துறையினர் அடித்து துன்புறுத்தியதாக அவர் சாட்சியம் அளித்தார்.
இருவரும் உயிரிழந்தவுடன் ஆவணங்களை மாற்றியதோடு, தந்தை மகன் மீது பொய்வழக்கையும் காவல்துறையினர் பதிவு செய்ததாக (Fake Case Filed) சிறப்பு சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் சாட்சியம் அளித்துள்ளார். சிறப்பு சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் தற்போது குலசேகரபட்டிணம் காவல்நிலையத்தில் பணிபுரிந்துவருகிறார்.
READ ALSO | சாத்தான்குளத்தில் மீண்டும் போலீஸ் அராஜகம்: துன்புறுத்தல் தொடர்கிறது….
முன்னதாக இந்த வழக்கில் காவல்நிலையத்தில் தந்தை - மகன் இருவரையும் துன்புறுத்தியதாக தலைமை காவலர் ரேவதியை தொடர்ந்து தற்போது சிறப்பு சார்பு ஆய்வாளரும் தநிதி மகன் இருவரையும் துன்புறுத்தியதாக சாட்சியம் அளித்துள்ளது வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து சிறப்பு சார்பு ஆய்வாளரிடம் 5 காவலர்களின் தரப்பில் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. அத்துடன், வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். 21ஆம் தேதியன்று ஆய்வாளர் ஸ்ரீதர் நேரடியாகவும், மற்ற 3 பேரின் வழக்கறிஞர்களும் குறுக்கு விசாரணை செய்ய வாய்ப்புள்ளது.
இந்த வழக்கில் ஜெயராஜின் மனைவி செல்வராணி, மகள் பெர்சி மற்றும் உறவினரான தேசிங்ராஜா, ஜெயராஜின் நண்பர்கள், அரசு மருத்துவர்கள், செவிலியர் என பலரிடம் விசாரணை நடந்துள்ளது. அவர்கள் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | திருமணத்துக்கு ஆசைப்பட்ட ’குடி’மகன் - கொலை செய்த தந்தை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR