நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய தொகுதிகளில் ஓட்டுக்கு பணம் கொடுத்தல் மற்றும் பணப்புழக்கம் குற்றச்சாட்டு காரணமாக தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் அதிமுக - எம்எல்ஏ சீனிவேல் மரணமடைந்தார். புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியின் எம்.எல்.ஏ., ஜான்குமார் பதவியை ராஜினாமா செய்தார். இந்த 4 தொகுதிகளுக்கும் கடந்த நவம்பர் 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்த ஓட்டு எண்ணிக்கையின் முடிவு மாலை 4 மணிக்கு முடிவடைந்தது.
தஞ்சை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ரங்கசாமி அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார்.
அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலும் போட்டியிட்ட அதிமுக அமோக வெற்றியை பெற்றுள்ளது.
கடந்த 19-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் அதிகபட்சமாக அரவக்குறிச்சி 81.92 சதவீதமும், தஞ்சையில் 69.02 சதவீதமும், திருப்பரங்குன்றத்தில் 70.19 சதவீதமும், நெல்லித்தோப்பில் 85.52 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது.
இன்று காலை 8 மணி அளவில் ஓட்டு எண்ணிக்கை தெடங்கியது, மாலை 4-ங்கு மணி அளவில் தேர்தல் எண்ணிக்கை முடிவு பெற்றது.