வெனிசுலாவில் நடக்கும் ஆணழகன் போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் சென்னை வாசி!

வெனிசுலா நாட்டில் பெரிய அளவில் நடைபெற இருக்கும் ஆண் அழகன் போட்டியில், சென்னையை சேர்ந்த ஒருவர் கலந்து கொள்ள இருக்கிறார்.  

Written by - Yuvashree | Last Updated : Aug 10, 2023, 11:13 AM IST
  • வெனிசுலா நாட்டில் பெரிய அளவில் ஆணழகன் போட்டி நடைபெற இருக்கிறது.
  • ரூபாரூ மிஸ்டர் இந்தியா காபல்லரோ 2023 பட்டத்தை வென்ற அனிஷ் ஜெயின் இதில் கலந்து கொள்ள இருக்கிறார்.
  • இப்போட்டி விரைவில் நடைபெற இருக்கிறது.
வெனிசுலாவில் நடக்கும் ஆணழகன் போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் சென்னை வாசி! title=

கோவாவில் நடைபெற்ற ரூபாரூ மிஸ்டர் இந்தியா காபல்லரோ 2023 பட்டத்தை சென்னையை சேர்ந்த அனிஷ் ஜெயின் வென்றார். இதையடுத்து, அவர் வெனிசுலாவில் நடைபெற  உள்ள காபல்லரோ யுனிவர்சல் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொள்கிறார். 

ரூபாரூ மிஸ்டர் இந்தியா காபல்லரோ 2023 பட்டத்தை வென்ற சென்னையை சேர்ந்த அனிஷ் ஜெயின் விரைவில் வெனிசுலாவில் நடைபெற உள்ள போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்துகொள்ள உள்ளார். 

ராஜஸ்தானை பூர்விகமாக கொண்ட அமித் ஜெயின் - அனுபமா ஜெயின் தம்பதியினர் சென்னையில் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் அனிஷ் ஜெயின் சென்னையில் வளர்ந்து ஃபாஷன் துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.

இவர் 2023 ஆண்டிற்கான ருபாரு மிஸ்டர் இந்தியா சாம்பியன்ஷிப்பில் போட்டியாளராக  கலந்து கொண்டார். இதன் தேசிய இறுதிப் போட்டி கோவா, போக்மல்லோ பீச் ரிசார்ட்டில் நடைபெற்றது. 

மேலும் படிக்க | செந்தில் பாலாஜியிடம் தீவிர விசாரணை: கரூரில் உள்ள சொகுசு பங்களா வீட்டில் மீண்டும் சோதனை

32 பேர் கலந்து கொண்ட இறுதிபோட்டியில் அனிஷ் ஜெயின் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.  மேலும் அடுத்த காலாண்டில் வெனிசுலாவில் நடக்கவிருக்கும் காபல்லரோ யுனிவர்சல் போட்டியில் இந்தியாவின்  பிரதிநிதியாக பங்கேற்க உள்ளார். இது தொடர்பான அறிவிப்பு சென்னை கோபாலபுரத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டது. 

யூனிவெர்சல் காபெல்லாரோ என்பது ஆண்களுக்காக சர்வதேச போட்டியாகும். இது தென் அமெரிக்காவின் வெனிசுலாவில் நடைபெற உள்ளது.  இந்த நிகழ்வை ஃபாஷன் உலகின்  மிகப்பிரபலமான ரியன்ரா டெசோனாடர் ஒருங்கிணைக்கிறார்.  ருபாரு மிஸ்டர் இந்தியா போட்டியில் வெற்றி பெறுபவர் காபல்லரோ யுனிவர்சல் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது நீண்ட கால வழக்கம். அதன் அடிப்படையில் அனிஷ் ஜெயின் வெனிசுலாவில் நடைபெறும் காபல்லரோ யூனிவெர்சல் போட்டியில் பங்கேற்க உள்ளார்.

இதில் பிரபல ஃபேஷன் இயக்குனர் கருண் ராமன் முக்கிய பங்கு வகிக்கிறார்.
2004 ஆம் ஆண்டில் மும்பையை சேர்ந்த சர்வதேச ஃபேஷன் நிபுணர் பங்கஜ் கர்பண்டாவால் உருவாக்கப்பட்ட  ருபாரு மிஸ்டர் இந்தியா என்பது இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பழமையான ஆண்கள் போட்டியாகும்.  இந்திய ஆண்களுக்கு ஃபாஷன் துறையில் சர்வதேச அளவில்  70% க்கும் அதிகமான பங்களிப்பை ரூபாரூ வழங்குகிறது. 

மேலும் படிக்க | மக்களுக்கு குட் நியூஸ்: தொடர் சரிவில் தக்காளி விலை-ஒரு கிலோ 30 ரூபாய்தான்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News