பிரதமர் மோடி வருகை
2024 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்காக இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி நாளை தமிழ்நாடு வருகிறார். சென்னையில் பாஜக சார்பில் போட்டியிடும் தென்சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்திர ராஜன், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி செல்வம், வட சென்னை வேட்பாளர் பால் கனகராஜ் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் பிரதமர் மோடி, பாண்டிபஜார் முதல் தேனாம்பேட்டை வரை வாகனப் பேரணி செல்ல உள்ளார். நாளை இரவு கிண்டியில் ஆளுநர் மாளிகையில் தங்கும் அவர், நாளை மறுநாள் (10.04.2024) காலை 10.30 மணிக்கு வேலூர் தொகுதியில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அதன்பிறகு மேட்டுப்பாளையம் செல்லும் பிரதமர் மோடி நீலகரி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் முருகனை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.
மேலும் படிக்க | திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி வழக்கு விசாரணைக்கு இடைகால தடை விதித்த உச்ச நீதிமன்றம்
சென்னையில் போக்குவரத்து மாற்றம்
இதனையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் மோடி பிரச்சாரத்தால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என்பதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் பகுதிகளின் பட்டியலை சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட சில சாலைகளில் மாலையில் செல்ல திட்டமிட்டிருந்தால் அதனை முழுமையாக தவிர்க்குமாறு காவல்துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசல் இருக்கும் சாலைகள்
ஜிஎஸ்டி சாலை முதல் அண்ணாசாலை ஒய்எம்சிஏ வரையும், நந்தனம் முதல் தியாகராய நகர் வரையும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசலுக்கு வாய்ப்புள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி சாலை, மவுண்ட் பூந்தமல்லி சாலை, சிபெட் சந்திப்பு, 100 அடி சாலை, அண்ணா சாலை, எஸ்.வி.பட்டேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, தியாகராய நகர் பகுதி சாலைகளை பிற்பகலில் தவிர்க்க வேண்டும் என்றும் சென்னை போக்குவரத்து காவல்துறை தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்ட பகுதிகள்
தியாகராய நகர், வெங்கட நாராயணா சாலை, ஜி.என்.செட்டி சாலை, வடக்கு போக் சாலை ஆகிய பகுதிகளில் வாகனங்கள் நிறுத்த தடை செய்யப்பட்ட பகுதிகள் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
வணிக வாகனங்களுக்கு முழுமையான தடை
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் இருந்து கத்திப்பாரா செல்லும் சாலை, மவுண்ட் பூந்தமல்லி சாலையில் இருந்து அண்ணா சாலை, சிபெட்டில் இருந்து அண்ணாசாலை நோக்கி செல்லும் சாலை, வடபழனியில் இருந்து தியாகராய நகர் வள்ளுவர்கோட்டம் நோக்கி செல்லும் சாலை, CPT-யில் இருந்து விமான நிலையம், காந்தி மண்டபம் நோக்கி செல்லும் சாலை, டைடல் பார்க்கில் இருந்து காந்தி மண்டபம் நோக்கி செல்லும் சாலை, அண்ணா சிலையில் இருந்து மவுண்ட் ரோடு நோக்கி செல்லும் சாலைகளில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை வணிகரக வாகனங்கள் செல்லவும் நிறுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க - கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டுவதில் தான் கமிஷன் அடிக்க முடியும் - பாஜக அண்ணாமலை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ