சென்னை: தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்துவதா? இல்லையா ரத்து செய்வதா அல்லது தள்ளி வைப்பதா? என கடந்த சில நாட்களாவே தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இன்று மாலை 5.30 அணிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினி +2 மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளார்.
+2 மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது குறித்த அறிக்கையை , இன்று மாலை முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கவுள்ளார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி (Anbil Mahesh Poyyamozhi) முதன்மை கல்வி அலுவலர்கள், மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் சட்டப்பேரவையில் உள்ள 13 கட்சிகளின் பிரதிநிதிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.
ALSO READ | பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடக்குமா? அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் அன்பில் மகேஷ் ஆலோசனை
தேர்வு நடத்து குறித்து அனைத்து விதமான ஆலோசனைக்கு பிறகு, சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து தரப்பினருடன் ஆலோசனை நடத்தினோம். இந்த ஆலோசனையில் பல்வேறு கருத்துக்கள் வைக்கப்பட்டன. இவை அனைத்தும் தமிழக முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படும். அதன் பிறகு முதல் அமைச்சர், +2 மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது குறித்து இறுதி அறிக்கையை வெளியிடுவார் எனத் தெரிவித்தார்.
மேலும் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கு தடுப்பூசி போட்ட பிறகு, செப்டம்பர் மாதத்தில் தேர்வு நடத்துவது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து வருவதாகவும் தகவலகள் வெளியாகி உள்ளது.
ALSO READ | தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறுமா? முதல்வர் முக்கிய ஆலோசனை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR