Pensioners New Scheme Updates: நாடு முழுவதும் அவ்வப்போது புதிய சலுகை சார்ந்த அறிவிப்புகளும், நடைமுறை மாற்றங்கள் சார்ந்த அறிவிப்புகளும் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஓய்வூதியதாரர்கள் பயன்படக்கூடிய வகையில் ஓய்வூதியர்கள் சிறப்பு சலுகை குறித்து தமிழக அரசு சார்பில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதேபோல அதற்கான அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. அதுக்குறித்து பார்ப்போம்.
தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கான புதிய சிறப்பு சலுகை என்பது முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மட்டுமே என்பது இங்கே கவனிக்கத்தக்கது. இதன் காரணமாக ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் இந்த சிறப்பு சலுகை கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பு நிதி ஆண்டிலிருந்து முன்னாள் ராணுவ வீரர்கள் சொத்து வரி மற்றும் வீட்டு வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது.
ஓய்வூதியதாரர்களுக்கான புதிய சிறப்பு சலுகை அரசாணை விவரம்
தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையில், தாய்நாட்டிற்காக நம் நாட்டினுடைய பல்வேறு எல்லைகளில் தன்னலமற்ற சேவைகளை செய்து வரும் நமது முன்னாள் படை வீரர்களின் நலனுக்காக இந்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
அதன்படி நடப்பு நிதி ஆண்டிலிருந்து சொத்து வீட்டு வரை செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்த அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த வரி விலக்கு அளிப்பதன் மூலம் 1.2 லட்சம் முன்னாள் ராணுவ வீரர்கள் பயன் பெறுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தை செயல்படுத்தும் தேவையான செலவினத்தை தமிழ்நாடு முன்னாள் ராணுவ வீரர்கள் நல நிதியில் இருந்து மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.
மேலும் இந்ததிட்டத்திற்கான செலவினம் தமிழ்நாடு முன்னாள் ராணுவ வீரர்கள் நல நிதியில் இருந்து மேற்கொள்ளப்படுவதால், இந்த உத்தரவுக்கு நிதித்துறை இசைவு பெற தேவையில்லை என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஓய்வூதியதாரர்களுக்கான புதிய சிறப்பு சலுகை நிபந்தனைகள்
அதே சமயம் இந்த திட்டத்திற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கிறது. அதாவது முன்னாள் ராணுவ வீரர்கள் தமிழ்நாட்டில் நிரந்தரமாக குடியிருப்பவராக இருத்தல் வேண்டும்.
முன்னாள் ராணுவ வீரர்களுடைய சொந்த வீட்டிற்கும் அவர்களின் சொந்த பயன்பாட்டில் குடியிருப்பாராக பயன்படுத்தப்படும் கட்டடத்திற்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்படும்.
முன்னாள் ராணுவ வீரர்கள் வருமான வரி செலுத்துபவராக இருக்கக் கூடாது.
ராணுவப் பணியில் இருந்து ஓய்வு பெற்றபின் மறுவேலைவாய்ப்பு முறையில் தமிழ்நாடு அரசுத்துறைகள், மத்திய அரசு பணிகள், மத்திய மாநில பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் இந்த மறுவேலைவாய்ப்பு பணியிலிருந்து ஓய்வூதியம் பெறுபவராக இருத்தல் கூடாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு தமிழக அரசு அறிவித்திருக்கக்கூடிய புதிய சிறப்பு சலுகையை முன்னாள் ராணுவ வீரர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
மேலும் படிக்க - பென்சன் பெறும் 60, 70, 75 வயது ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்.. வங்கி புதிய சலுகை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ