நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருகிறது. லிட்டருக்கு 100 ரூபாயை கடந்து பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை ஆவதால் விலைவாசி உச்சத்தை தொட்டுள்ளது. பெட்ரோலியப் பொருட்களின் விலைய குறைக்க வேண்டும் என மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாடினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, பெட்ரோல் டீசல் விலையை மாநிலங்கள் குறைக்க வழி காணவில்லை என்று பேசினார். ஒன்றிய அரசு பெட்ரோலியப் பொருட்களின் விலையை குறைத்த போதும் சில மாநிலங்கள் குறைக்காமல் இருந்ததால் முழு வெற்றியை அடைய முடியவில்லை என்றும் இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசுடன் மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் பேசினார்.
மேலும் படிக்க | ரோஜாவுக்கு நான்தான் பெயர் வைத்தேன் - பாரதிராஜா பெருமிதம்
பிரதமரின் இந்த பேச்சுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் தற்போது சட்டப்பேரவையில் பதில் அளித்துள்ளார். அதில் அவர் பிரதமர் மோடி முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கிறார் என்று குற்றம் சாட்டினார். 5 மாநிலத் தேர்தல் வருவதற்கு முன்பு பெட்ரோலியப் பொருட்களின் விலையை குறைப்பது போல் குறைத்துவிட்டு தேர்தல் முடிந்தவுடன் மடமடவென உயர்த்தி ஒன்றிய அரசு பாசாங்கு காட்டியதாக முதலமைச்சர் காட்டமாக விமர்சித்தார். இப்படி பெட்ரோல் விலையை குறைப்பது போல நடித்து மக்களை ஒன்றிய அரசு ஏமாற்றிவருவதாக முதல்வர் பேசியிருக்கிறார்.
முதலமைச்சரின் பேச்சை தொடர்ந்து சட்டப்பேரவையில் பேசிய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், திமுக ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் வாட் வரி குறைக்கப்பட்டே வந்திருப்பதாகவும், ஒன்றிய அரசு கடந்த 7 ஆண்டுகளாக பல மடங்கு வரியை உயர்த்திவிட்டு தற்போது 5 ரூபாய் குறைத்தவுடன் மாநில அரசை குறைக்கச் சொல்கிறது என்றார். ஆனால் அரசு சொல்வதற்கு முன்பே திமுக 3 ரூபாயை குறைத்து இருந்ததாக பேசினார். இந்த வரி குறைப்பால் மாநில அரசுக்கு 1160 கோடி ரூபாய் இழப்பு என்றும் நிதியமைச்சர் பேசினார்.
மேலும் படிக்க | தங்கம் விலையில் அதிரடி சரிவு: நகை வாங்க படையெடுக்கும் மக்கள்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR