மதுரை கோச்சடை பகுதியில் பாண்டியன் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் வளாகத்தில் பாண்டியன் சில்க்ஸ் & சாரிஸ் புதிய விற்பனை நிலையத்தை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் இராதாகிருஷ்ணன் குத்து விளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ் சேகர் உடன் உள்ளார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது, கூட்டுறவு சங்கங்களை பல்நோக்கு சங்கங்களாக மாற்றுவதில் நல்ல பலன் கிடைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க: பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் தவறு இல்லை - டிடிவி தினகரன்!
மக்களின் அனைத்து விதமான தினசரி பயன்பாட்டில் கூட்டுறவு சங்கங்களின் தேவை இருக்கிறது. கூட்டுறவு சங்களின் வைப்பு மட்டும் 71,955 கோடி உள்ளன. ஓர் ஆண்டுக்கு மட்டும் 64,140 கோடி கடன் மக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன. இந்த ஆண்டு மார்ச் வரை இலக்கு 12 ஆயிரம் கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இன்று கூட்டுறவு வளர்ச்சியின் அடுத்தக்கட்டமாக மாவட்ட அளவிலான 40 நுகர்வோர் சங்கள் மூலம் கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மதுரையில் கிடைக்கு புடவைகள் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளன. கூட்டுறவு பல் அங்காடியில் நியாயவிலைக்கடையிறுதானியங்கள் நடவடிக்கைகள் எடுக்கப்படும். 2150 புதிய கூட்டுறவு முயற்சிகள் செய்யப்பட்டு உள்ளன. ரேசன் கடைகளில் உள்ள கைரேகை இயந்திரங்களில் ஏற்படும் கோளாறுகள் விரைவில் புது டெண்டர் எடுக்கப்பட்டவுடன் படிப்படியாக சீராகும்.
வீடுகளுக்கு நேரடியாக் சென்று பொருட்களை கொடுக்கு முறை சாத்தியமில்லை. 2.23 கோடி குடும்ப அட்டைகள் இருப்பதால் இதில் பெரிய நடைமுறைச் சிக்கல் இருக்கும் வயதானோருக்கு கண்டறிந்து வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். புதிதாக கட்டப்படும் ரேசன் கடைகளுக்கு கழிப்பறை வசதியுடன் அமைக்கப்படும் ஏற்கனவே இருக்கும் ரேசன் கடைகளுக்கு தேவையான ஏற்பாடுகளை முடிந்தவரை செய்து வருகிறோம். ஓராண்டுக்குள் கழிவறை வசதிகள் செய்து கொடுக்கப்படும். அதேபோல், 3000க்கும் மேற்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு இதை எடுத்துச் செல்ல விளம்பரம் அவசியம் அதை முன்னெடுப்போம். நியாய விலைக்கடையில் மக்களை கட்டாயப்படுத்தி தேவையில்லாப் பொருட்களை விற்கக் கூடாது. நியாயவிலைக் கடைகளை ஒரே குடையின் கீழ் கொண்ட வரவேண்டுமென்பது கொள்கை ரீதியான முடிவு. அதனை தொடர்ச்சியாக பின்பற்றி வருகிறோம் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: ஜெயலலிதா, சசிகலாவை கம்பி எண்ண வைத்தது திமுக சட்டத்துறை - உதயநிதி ஸ்டாலின் புகழாரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ