COVID Vaccine சென்னையில் மனித பரிசோதனை - வெளியானது முக்கிய தகவல்!

சென்னையில் மொத்தம் 170 பேருக்கு இந்த தடுப்பூசி மருந்து அளித்து பரிசோதிக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக 200 டோஸ் தடுப்பு மருந்து சென்னை வந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 9, 2020, 10:38 AM IST
  • சென்னையில் மொத்தம் 170 பேருக்கு இந்த தடுப்பூசி மருந்து அளித்து பரிசோதிக்கப்பட உள்ளது.
  • முதல்கட்டமாக 200 டோஸ் தடுப்பு மருந்து சென்னை வந்துள்ளது.
  • "கோவாக்ஸின்" (COVAXIN) கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்குச் செலுத்திப் பரிசோதிக்கும் முயற்சி.
  • கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாத 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் டோஸ் வழங்கப்படவுள்ளது.
COVID Vaccine சென்னையில் மனித பரிசோதனை - வெளியானது முக்கிய தகவல்! title=

சென்னை: கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் பரவத்தொடங்கிய கொடிய கொரோனா வைரஸ், தற்போது சுமார் 200 நாடுகளில் பரவியுள்ள வைரஸ் தாக்கத்தால், இதுவரை 2 கோடியே 73 லட்சத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல இந்த வைரஸ் 8,97,713 பேரை காவு வாங்கி உள்ளது. இப்படி பெரும் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தி வரும், இந்த வைரஸை உலகில் இருந்து முற்றிலும் ஒழிக்க கொரோனாவுக்கு தடுப்பூசி (Corona Vaccine) தயாரிப்புக்கான பணிகள் முழிவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதுவரை கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தனிமைப் படுத்திக் கொள்ளுதல் ஒன்றே தீர்வாக உள்ளது. எனவே தான் ஊரடங்கு (Lockdown) கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்துடன் இணைந்து ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிந்துள்ள "கோவாக்ஸின்" (COVAXIN) கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்குச் செலுத்திப் பரிசோதிக்கும் முயற்சி தமிழகத்தில் தொடங்கியது.

ஆக்ஸ்போர்ட் சீரம் இன்ஸ்டிடியூட் கோவிஷீல்டு (Covishield) என்ற தடுப்பு மருந்தை கண்டு பிடித்து சோதனை செய்து வருகிறது.

ALSO READ | 

நற்செய்தி... கொரோனா தடுப்பூசி இந்த வாரம் முதல் பொதுமக்களுக்கு கிடைக்கும்..!

இந்த வருடம் COVID Vaccine கிடையாது.. அப்போ தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

தற்போது இந்தியாவிலும் பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் என்ற தடுப்பு மருந்தையும், ஆக்ஸ்போர்ட் சீரம் இன்ஸ்டிடியூட் கோவிஷீல்டு தடுப்பூசியையும் மனித பரிசோதனை செய்ய தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.  

சென்னையில் மொத்தம் 170 பேருக்கு இந்த தடுப்பூசி மருந்து அளித்து பரிசோதிக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக 200 டோஸ் தடுப்பு மருந்து சென்னை வந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாத 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் டோஸ் வழங்கப்படவுள்ளது. 

Trending News