மிகவும் ஆபத்தானதாக நிலையில் டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்து உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
டெல்லியில் உள்ள காற்றின் தரக் குறியீடு (AQI) செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) 363 ஐ எட்டியது. சாந்தினி சவுக்கில் AQI 466 'மிகவும் கடுமையான' அளவில் குறைந்தது. இங்கே காற்றின் தரம் 379 அளவீடு என பதிவாகி உள்ளது. மூடுபனியின் விளைவால் இன்று டெல்லி முழுவதும் புகைமூட்டத்துடன் காணப்பட்டது. டெல்லியில் மாசு அளவு கடந்த 24 மணி நேரத்தில் மீண்டும் அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில், டெல்லியை ஒட்டியுள்ள நொய்டாவில் (Noida) காற்றின் தரம் 573 ஐ எட்டியது. குருகிராம் பற்றி பேசும்போது, இங்குள்ள காற்றின் தரம் டெல்லி மற்றும் நொய்டாவை விட சிறப்பாக இருக்கிறது. இங்கே காற்றின் தரம் 379 அளவீடு என பதிவாகி உள்ளது. மூடுபனியின் விளைவால் இன்று டெல்லி முழுவதும் புகைமூட்டத்துடன் காணப்பட்டது.
டெல்லியில் மாசு அளவு கடந்த 24 மணி நேரத்தில் மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் அடுத்த சில நாட்களுக்கு டெல்லி மற்றும் என்,சி.ஆர் பகுதிகளில் காற்றின் தரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை, அண்டை மாநிலங்களின் வைக்கோல் எரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமாகி வருகிறது.
டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டத்தால் நடைபாதையில் வசிக்கும் மக்கள் அவதியுறுகின்றனர். குளிர் தாங்க முடியாத மக்கள் சாலையில் விறகு சுள்ளிகளை வைத்து தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். கடுங்குளிரால் நடைபாதையில் வசிக்கும் தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.